அசின் ஒரு பாவம்!.. விருது கிடைக்காத கோபத்தில் வன்மத்தை கக்கிய பாலிவுட் நடிகை...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:14  )

Asin: நடிகை அசினிடம் தோற்ற மிகப்பெரிய பாலிவுட் நடிகை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தினை பெற்றவர் நடிகை அசின். தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

அதிலும் சூர்யாவுடன் இணைந்து நடித்த கஜினி திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. கோலிவுட்டில் வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்த நடிகை அசின் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

தமிழிலிருந்து சென்றாலும் ஹிந்தியில் அவருக்கு முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதற்காக அவர் புதுமுக நடிகைக்கான விருதுகளையும் குறித்தார். தொடர்ந்து ஹவுஸ்புல் மற்றும் கில்லாடி என வெற்றி படங்களை மட்டுமே அசின் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து மொத்தமாக விலகினார். இந்நிலையில் காபி வித் கரன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா ஷர்மா அசினை பாவம் என கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரப் நே பானா டி ஜோடி ரப் திரைப்படத்தில் நடித்து அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் அறிமுகமான அதே வருடத்தில் தான் நடிகை அசினும் ஹிந்தி கஜினியின் மூலம் பாலிவுட்டிற்குள் நுழைந்தார். அதனால் அந்த ஆண்டு அனுஷ்கா சர்மாவுக்கு புதுமுக நடிகை விருது எதுவும் கிடைக்கவில்லை.

இது குறித்து அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மாவிடம் 'நீங்கள் ஒருநாள் ரன்வீர் கபூர் ஆக மாறினால் என்ன செய்வீர்கள்?' என கேட்கப்பட்டது. நான் அவரிடம் இருந்த புதுமுக நடிகருக்கான விருதை எல்லாம் அனுஷ்கா ஷர்மாவிற்கு மாற்றி கொடுத்து விடுவேன். ஏனெனில் அவருக்கு எந்த விருதுதம் அந்த சமயத்தில் கொடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

யாரிடம் விருதை இழந்தீர்கள் என்ற கேள்விக்கு ஏ சின்(பாவம்) எனக் குறிப்பிடுவார். தனது கிடைக்கப்பட வேண்டிய விருதை தமிழில் நடித்த பின்னரும் ஹிந்தியில் நடித்த அசின் தட்டி சென்றதை அனுஷ்கா சர்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story