Anushka: மறுபடியும் அருந்ததியா?.. கண்ணுல தண்ணி கையில சுருட்டு... காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா செட்டி. பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இரண்டு என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அனுஷ்கா செட்டி. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அனுஷ்கா தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அருந்ததி, தேவசேனா உள்ளிட்ட அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்து பலரையும் வியக்க வைத்திருக்கின்றார். இவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது இஞ்சி இடுப்பழகி திரைப்படம்.
ஆர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் மிக குண்டான பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அந்த படத்திற்காக ஓவர் வெயிட் போட்டிருந்த அவர் பின்னர் அதனை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு பல பட வாய்ப்புகளை இழந்தார். ஒரு வழியாக தற்போது உடல் எடையை குறைத்திருக்கும் அனுஷ்கா தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
40 வயது தாண்டிய நிலையிலும், இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். கடந்த வருடம் மிஸ்டர் செட்டி மிஸ்டர் பொலிசெட்டி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது அனுஷ்கா செட்டி மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் காதி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா செட்டி மலையாளத்தில் அறிமுகமாக இருக்கின்றார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகின்றது. நடிகை அனுஷ்கா இன்று தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
அவரின் பிறந்த நாளை முன்னிட்டு காதி படக்குழுவினர் அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்கள். கையில் சுருட்டை பிடித்தபடி கண்களில் கண்ணீர் கலங்கி நிற்கின்றது. இதை பார்த்த பலரும் மீண்டும் அருந்ததியா? என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.