Aparnadas: சூர்யாவை பார்த்ததும் துள்ளி குதிச்சுகிட்டு ஓடுன நடிகை... யாருன்னு தெரியுமா?... வைரல் வீடியோ...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:07  )

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதாணி நடித்திருக்கின்றார். மேலும் பாபி தியோல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆடியோ லான்சில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு படம் குறித்து பேசி இருந்தார்கள். இரு வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படம் ஒரு பீரியட் படமாக தயாராகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்திருக்கின்றார் இயக்குனர் சிறுத்தை சிவா. முதல் பாகம் வருகிற 14-ஆம் தேதி ரிலீஸ்-ஆக இருப்பதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார்கள்.

நடிகர் சூர்யாவும் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் 9 நாட்கள் இருப்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். இதற்காக டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் பாலையா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சுவாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நேற்று கேரள மாநிலம் கொச்சியில் உள்ள லுலு மாலில் கங்குவா படக்குழு பிரமோஷன் பணியில் ஈடுபட்டது. இதை கேள்விப்பட்ட பலரும் லுலு மாலில் குவிய தொடங்கினார்கள். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் குவிந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா படம் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அபர்ணாதாஸ் வந்திருந்தார். சூர்யாவை பார்த்தவுடன் மிகுந்த குஷியான அபர்ணாதாஸ் அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க ஆசைப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தார். பின்னர் இவரும் இவரது கணவருமான தீபக் பரம்பொல்லும் உடன் இருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து சூர்யா கேக் வெட்ட தொடங்கிய போது மேடைக்குச் சென்ற அபர்ணா தனது கணவர் மற்றும் நடிகர் சூர்யாவை போட்டோ எடுத்துக்கொண்டு பின்னர் தனியாக சூர்யாவுடன் செல்பி எடுத்துக் கொண்டார். போட்டோ எடுத்த பிறகு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த அபர்ணா மிகவும் மகிழ்ச்சியாக சூர்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நண்பர்களிடம் காட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story