ஏஆர் ரகுமான் இல்லைனா இ ‘ந்தியன் 2’ படம் அவ்ளோதான் போல.. போட்ட விதை அப்படி

by ராம் சுதன் |

இன்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையில் கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், விவேக், மனோபாலா போன்ற எண்ணற்ற முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். லஞ்ச ஊழலை அடிப்படையாக வைத்து ஊழலுக்கு எதிராக அரசியல் சார்ந்த கதைகளை சொல்லும் திரைப்படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.

ஒட்டுமொத்த அரசியலுக்கும் ஒரு பாடமாக இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2 என கமல் பல பிரமோஷன்களில் சொல்லி இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்கள் அவரவர் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் இந்தியன் 2 படத்தை பற்றி ரசிகர்களின் பொதுவான கருத்தாக இருப்பது படத்தில் ஆங்காங்கே இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த அந்த பிஜிஎம் இந்தியன் 2 படத்திலும் ஒலிப்பதால் அது ரசிகர்களுக்கு ஒரு கூஸ் பம்பாக இருக்கின்றது. அந்தளவுக்கு ரஹ்மானின் இசை இந்தியன் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

அந்த பிஜிஎம்-ஐ கேட்கும் போது புல்லரிக்கும் வகையில் தங்களுடைய உணர்வு பூர்வமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கதை மற்றும் அனிருத் இசை இவை எல்லாவற்றையும் தாண்டி ஏ ஆர் ரகுமானின் அந்த பிஜிஎம் தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததாக இந்த இந்தியன் 2 படத்தில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

கடைசியில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் எந்த அளவுக்கு அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததோ அதேபோல இந்தியன் 2 படத்திற்கும் ஏ ஆர் ரகுமானின் அந்த பிஜிஎம் ஒரு முக்கிய காரணமாக அமையும் என்று தான் சொல்லப்படுகிறது.

Next Story