இதனால்தான் என் அப்பா பற்றி நான் பேசுவது இல்லை!.. ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:44  )

AR Rahman: ஒரு குடும்பத்தில் தந்தையின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியம். அதுவே, அவரின் குழந்தைகளை வழி நடத்தும். அதுவும் சினிமா போன்ற துறைகளில் தந்தையின் அன்பும், ஆதரவும் மிகவும் முக்கியம். விஜய், சிம்பு, தனுஷ், கார்த்தி, சூர்யா போன்றவர்கள் சினிமாவில் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணம் அவர்களின் அப்பாதான்.

டி ராஜேந்தர் இல்லையேல் சிம்பு இல்லை. எஸ்.ஏ.சந்திரசேகர் இல்லையெனில் விஜய் இல்லை. மற்ற நடிகர்களில் சிலருக்கு அப்பா சினிமாவை சார்ந்தவராக இல்லையென்றாலும் மகனை வழிநடத்தி இருப்பார்கள். ஆனால், அப்பாவே இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து ஆஸ்கர் விருது வரை போனவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவரின் அப்பா ஆர்.கே.சேகர் மலையாளத்தில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்தவர். நேரம் கிடைக்கும்போது மகன் திலீப்புக்கு இசையை சொல்லி கொடுத்தார். அதே நேரம், திலீப் சிறுவனாக இருக்கும்போது அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

திலீப்பின் தாய்க்கு எப்படி வாழ்க்கைய நடத்துவதென்றே தெரியவில்லை. திலீப் இளையராஜாவிடம் கீ போர்டு வாசிக்கும் வேலைக்கு சேர்ந்தார். புன்னகை மன்னன் உட்பட பல படங்களில் திலீப் கீ போர்டு வாசித்திருக்கிறார். அதன்பின் சொந்தமாக இசையமைக்க துவங்கினார். ஆனால், சினிமாவில் இல்லை. நிறைய விளம்பர படங்களுக்கு இசையமைத்தார்.

அப்போதுதான் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அப்போது அவரின் அம்மா இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் திலீப் ரஹ்மானாக மாறினார். முதல் படத்திலேயே ரஹ்மான் தேசிய விருது வாங்கினார். அதன் பின் தமிழ், ஹிந்தி என தனது துள்ளலான இசையால் இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார். ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.

ஆனால், எங்கேயும் தனது அப்பா பற்றி ரஹ்மான் பேசுவதில்லை. இதுபற்றி விளக்கமளித்துள்ள ரஹ்மான் ‘எனது அப்பாவின் மரணம் சகித்துக்கொள்ளவே முடியாத ஒரு இருள் போல இருந்தது. இறுதிகாலத்தில் என் அப்பா சொல்ல முடியாத சிரமங்களை அனுபவித்தார். அதனால்தான் அவரை பற்றி நான் அதிகம் பேசுவதில்லை. கருணை, தாராள மனப்பான்மை, ஊக்கம் தரும்படியான உத்வேகம் இவற்றையெல்லாம் எனது தந்தையிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன்’ என சொல்லி இருக்கிறார்.

Picture courtesy to manorama..

Next Story