ஒரு நிமிட பிரச்னையால் மிகப்பெரிய விருதை இழந்த ஏ.ஆர்.ரஹ்மான்… அந்த சூப்பர்ஹிட் படமாம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:23  )

AR Rahman: இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உலகம் முழுவதும் இருக்கும் எல்லா விருதுகளையும் வாங்கி இருக்கிறார், அவர் தான் தவறவிட்ட முக்கிய படத்திற்கான விருது குறித்து பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். முதல் படமே மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. அப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் பேசிய விருது வரை பெற்றார். தொடர்ச்சியாக தமிழில் அவருக்கு வாய்ப்புகள் புரிந்தது.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட எல்லாம் மொழிகளிலும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அவருடைய குரலுக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மியூசிக்கை விரும்பும் அனைத்து ரசிகர்களும் அடிமை என்றுதான் கூற வேண்டும்.

பாலிவுட்டில் வெளியான ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்கு ஆஸ்கார் விருதை பெற்றார். விழா மேடையில் அவர் பேசிய எல்லா புகழும் இறைவனுக்கே என்ற டயலாக் இன்னமும் மியூசிக் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் அவரை இசையில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதுபோலவே மலையாளத்தில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். அப்படத்தில் பிரித்திவிராஜ் நடித்திருந்தார். பாலைவனத்தில் சிக்கிய ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடந்த கதையில் பின்னணி இசை பெரிய பங்கு வகித்தது.

அதற்கு யார் ரகுமான் மிகப்பெரிய அளவில் ஈடு கொடுத்திருப்பார். இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆனது. நான்கு பாடல்களைக் கொண்ட இதன் மியூசிக் டிராக்டை கிராமிய விருதுகளுக்கு அனுப்பலாம் என நினைத்தபோது தகுதி பெற ஒரு நிமிடம் குறைவாக இருந்ததால் இப்படம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாக ஏ ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார்.

ஒரு சின்ன நூலிலையில் மிகப்பெரிய விருதை அவர் தவற விட்டதாக ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பேசி வருகின்றனர்.

Next Story