Categories: Cinema News latest news

இதயத்தில் இருந்து வரும் இசை யாருடையது? இசைப்புயல் அவிழ்த்த ரகசியம்

இளையராஜாவின் மார்க்கெட் இசைப்புயல் வந்தபிறகு குறைந்தது என்றார்கள். இப்போது எல்லாமே அனிருத் தான் என்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப எத்தனையோ இசை அமைப்பாளர்கள் மாறினாலும் இன்றும் இளையராஜாவின் இசை தான் கோலோச்சி நிற்கிறது. அது இருக்கட்டும்.

இசைப்புயல் என்றாலே அது ஏ.ஆர்.ரகுமான்தான். அவரது வாழ்க்கையிலும் புயல் வீசி ஓய்ந்துவிட்டது. இவருடைய இசைக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவருக்கும் பிடித்த இசை பிரபலங்கள் மற்றும் அவர்களிடம் கற்றுக் கொண்டது என்னென்னன்னு சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

ஏ.ஆர்.ரகுமான்: இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நீயா, நானா கோபிநாத் உடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தனது சீனியர் இசை அமைப்பாளர்களிடம் தான் கற்ற விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது என்னென்ன சொன்னாருன்னு பாருங்க.

டி.ராஜேந்தர்: எம்எஸ்.வி.யிடம் நான் பணியாற்றி உள்ளேன். தமிழ் மொழியைக் குழைத்து அதை அவரது இசையில் கொண்டு வருவார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல டிஆரின் இசை நேரா இதயத்தில் இருந்து வருவது. அவர் இசை கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அவரது இசைக்கு என்று பெரிய பவர் இருக்கு.

இளையராஜாவின் இசை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாருக்கும் தெரியும். அவரிடம் கற்றுக்கொள்ள ஒரு விஷயம் உண்டு. கம்போசிங் முடிந்ததும் எல்லாரும் குடிக்க ஆரம்பித்து விடுவாங்க.

இளையராஜா: ஆனா கட்டியிருக்கும் வேட்டி அவிழ்ந்து வீட்டிற்குப் போய் மனைவியிடம் கலவரம் செய்யும் அளவுக்கு குடிப்பாங்க. அந்த சூழலை மாற்றி அனைவருக்கும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இளையராஜா தான்.

மரியாதையை உருவாக்கியவர்: அவரது குழுவில் வாசிக்கிறோம் என்றால் மற்றவர்கள் மரியாதையாக நம்மை நடத்துவாங்க. அந்த மரியாதையை உருவாக்கியவர் அவர்தான். இந்தக் கலைக்கு அவர் மதிப்பு கொடுத்ததை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று நெகிழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

Published by
sankaran v