சூர்யா 45 படத்துக்கு டாட்டா காட்டிய ஏ.ஆர் ரகுமான்.. திடீர் முடிவுக்கு காரணம் என்ன?..

சூர்யாவின் கங்குவா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்த திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
மேலும் சூர்யாவின் கேரியரில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ரசிகர்களின் கடுமையான விமர்சனங்கள் காரணமாக படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
சூர்யா 45:
கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாக கூறப்படுகின்றது. அடுத்ததாக சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு இசைபுயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் திடீரென்று இந்த திரைப்படத்திலிருந்து ஏ ஆர் ரகுமான் விலகி இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
ஏ ஆர் ரகுமானின் பெயர் நீக்கம்:
சூர்யா 45 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் போஸ்டர்களில் எப்போதும் ஏ ஆர் ரகுமானின் பெயர் தொடர்ந்து இடம்பெறும். ஆனால் அண்மையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணு கமிட் ஆகிய இருந்த நிலையில் அதற்கான போஸ்டர் ஒன்று வெளியானது. அந்த போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பெயர் இடம் பெறாததால் படத்தில் இருந்து ரஹ்மான் விலகி விட்டாரா? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
காரணம் என்ன?
சூர்யா 45 படத்தில் இருந்து ஏ ஆர் ரகுமான் விலகியதன் காரணம் என்ன என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அண்மையில் தனது மனைவியை ஏ ஆர் ரகுமான் விவாகரத்து செய்து பிரிந்திருந்தார். இந்நிலையில் அவர் ஓராண்டுக்கு சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ள இருப்பதாக வதந்திகள் பரவி வந்தது.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மகள் கதீஜா இதுபோன்ற வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார். தற்போது அவர் அப்படத்தில் இருந்து விலகியதற்கான உண்மை காரணம் என்ன? என்று ரசிகர்கள் தொடர்ந்து படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் ஏ.ஆர் ரகுமான் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக இசையமைத்து வருகின்றார். இதனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக கூட இப்படத்திலிருந்து அவர் விலகி இருக்கலாம். இல்லையென்றால் படக்குழுவினருடன் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு படத்தில் இருந்து விலகினாரா? என்பதும் தெரியவில்லை. விரைவில் சூர்யா 45 படத்திலிருந்து ஏ.ஆர் ரகுமான் விலகியதற்கான காரணம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.