விஜயின் கோட் படத்தின் உண்மை வசூல் என்ன தெரியுமா? இதுக்குதான் தளபதி வேணும்… அர்ச்சனா ஷேரிங்ஸ்!..

by ராம் சுதன் |

Archana: பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் திரைப்படத்தின் வசூலை பட்ஜெட் அளவு கூட எடுக்காத நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய கோட் திரைப்படத்தில் மிகப்பெரிய வசூலை குவித்து தற்போது கோலிவுட்டில் உச்ச இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிக உயரத்தில் இருந்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சமீபத்திய நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. சூப்பர் ஹிட் நடிகர்களை வைத்து படத்தை இயக்குனாலும் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாத மோசமான நிலை உருவாகி இருக்கிறது.

ஆனால் பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜயை வைத்து கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை தயாரித்தது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு 250 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகவே லாபம் சம்பாதித்து விட்டதாக பேச்சுக்கள் அடிப்பட தொடங்கியது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அவர் பேசும்போது, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் திரைப்படம் 450 கோடி வசூலை குவித்தது என பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இந்த வசூல் திரையரங்கு வசூல் மட்டும் தானே என்பது முக்கிய விஷயம். நான் தியேட்டரிக்கல் உரிமை என சொல்லப்படும் ஆடியோ, சாட்டிலைட், உரிமைகளில் மிகப்பெரிய வசூல் கோட் படத்திற்கு கிடைத்தது.

திரையரங்க வசூலில் கூட வரி, ஜிஎஸ்டி, திரையரங்க பங்குகள் போக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் தான் கிடைத்து இருக்கிறது. நடிகர் விஜய் போல மிகப் பெரிய நடிகர்களிடம் இருந்து முதல் நாள் லாபம் மட்டுமே கிடைக்கும். அதன் பின்னர் கதை தான் பேசும் எனக் கூறுகின்றனர்.

ஆனால் மிகப் பெரிய நடிகர்களை நடிக்க வைப்பதில் அவர்களுடைய பங்கு படத்தில் இருக்கிறது என்றாலே நான் தியேட்டரிக்கல் உரிமை மிகப்பெரிய விலையில் செல்லும். அதுதான் படத்திற்கு மிகப்பெரிய வசூலையும் பெற்றுக் கொடுக்கும். இதழ் நடிகர் விஜயால் மட்டுமே இதுபோன்ற மிகப்பெரிய வசூலை குவிக்க முடிந்திருக்கிறதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Next Story