ஆண்ட்டியை பிரிந்த ஸ்ரீதேவி மகன்... என்ன இப்படி பொசுக்குனு சொல்லிட்டாரு?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:25  )

Sridevi: பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூர் தன்னுடைய காதலியை பிரிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. அதே சமயத்தில் இவருக்கு ஹிந்தி படங்களில் வாய்ப்புகள் கூடிய தன்னுடைய கவனத்தை அந்த பக்கம் திருப்பினார். அந்த நேரத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் இருவரும் காதலில் விழுந்தனர்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியை போனி கபூர் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் போனிகபூரின் முதல் மனைவிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்த மகன்தான் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர். இவர் தன்னைவிட 12 வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை டேட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதுவரை இரு தரப்பும் எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் மும்பை சிவாஜி பார்க்கில் ராஜ் தாக்ரே நடத்திய தீபாவளி விருந்தில் அர்ஜூன் கபூர் கலந்து கொண்டார்.

இப்பொழுது அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது தான் சிங்கிள் தான் என்பதை அர்ஜுன் கபூர் தெளிவுப்படுத்தினார். தன்னைவிட பன்னிரண்டு வயது மூத்த நடிகை அர்ஜுன் டேட்டிங் செய்து வந்தது பல இடங்களில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் தற்போது பிரிந்து இருப்பது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story