தக் லைப் படத்தில் களமிறங்கும் இன்னொரு நடிகர்!.. லிஸ்ட்டு பெருசா போகுதே!....

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவரின் படங்களில் எப்போதும் ஒரு குவாலிட்டி இருக்கும். இவர் எடுக்கும் படங்களின் கதை தேசிய அளவில் இருக்கும். அதனால்தான் இவர் இயக்கிய ரோஜா, பம்பாய் போன்ற படங்கள் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

துவக்கத்தில் சில படங்களை இயக்கினாலும் கமலை வைத்து மணிரத்னம் இயக்கிய நாயகன் படம் தேசிய அளவில் கவனம் பெற்றது. மணிரத்னம் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை ரசிகர்களுக்கும் திரையுலகிற்கும் காட்டிய படம் இது. இந்த படம்தான் பல இயக்குனர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் உருவாக்கியது.

பொன்னியின் செல்வன் ஹிட் படத்தை கொடுத்து இப்போதுள்ள இளம் இயக்குனர்களுக்கும் டஃப் கொடுத்தார் மணிரத்னம். இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. ஒருபக்கம் விக்ரம் படம் முலம் கமல் ஹிட் கொடுக்க மாமனாரும், மருமகனும் பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்தனர்.

அப்படி உருவான திரைப்படம்தான் தக் லைப். நாயகன் படத்திற்கு பின் மணிரத்னத்துடன் கமல் இணைந்ததால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. இந்த படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் அவர்கள் இருவரும் இப்படத்திலிருந்து விலகி விட்டதாக சொல்லப்பட்டது.

அதன்பின் யாரும் எதிர்பார்த்திராத வகையில் இப்படத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்டது. சிம்பு நடிப்பதால்தான் ஜெயம் ரவி விலகியதாகவும் சொல்லப்பட்டது. எனவே, படத்தின் மொத்த கதையையும் மணிரத்னம் மாற்றி எழுதியதாக செய்திகள் வெளியானது. அதோடு, இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா என பலரும் நடிப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஓ மை கடவுளே புகழ் அசோக் செல்வன் தக் லைப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அவருக்கான காட்சிகளை மணிரத்னம் எடுக்கவுள்ளாராம். ஆனால், அவரின் கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பது படத்தை பார்த்தால்தான் தெரியவரும்.

Next Story