ஏன் அசோக் செல்வன் மீது இவ்வளவு வன்மம்? தவறே செய்யாமல் பழி போடுவது நியாயமா?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அசோக் செல்வன் எப்படி ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறாரோ அதைபோல கீர்த்தி பாண்டியனும் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அசோக் செல்வனை பொறுத்தவரைக்கும் தமிழ் இண்டஸ்ட்ரியில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். அவருக்கு என தனி ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் திருமலை என்பவர் அசோக் செல்வனை பற்றி சமீபகாலமாக காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

அசோக் செல்வன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம்தான் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனர் திருமலை. இவர்தான் அசோக் செல்வனை பற்றி அந்த விமர்சனத்தை கூறி வருகிறார். அதாவது சம்பளபாக்கியை தராமல் டப்பிங் பேச வரமாட்டேன், பட புரோமோஷனுக்கு வரமாட்டேன் என அசோக் செல்வன் சொன்னதாகவும் இதனால் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானதாகவும் திருமலை கூறினார்.

இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் அவரது கருத்தை கூறினார். அதாவது அசோக் செல்வனை தான் அறிமுகப்படுத்தி தன்னால்தான் இந்த நிலைமைக்கு வந்தார் என இருந்தால் அவர் மீது இந்தளவு கோபப்படலாம். ஆனால் அசோக் செல்வனை தானா தேடி போனதும் திருமலைதான். சம்பளத்தின் அட்வான்ஸை கொடுத்ததும் அவர்தான். சம்பள பாக்கி வைத்ததும் அவர்தான்.

அப்படி இருக்கும் போது அந்த சம்பள பாக்கியை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. ஒரு படத்தை பொறுத்தவரைக்கும் டப்பிங் தான் நடிகர்களின் கடைசி கட்ட பயணம். சம்பளத்தில் விட்டுக் கொடுத்து டப்பிங் முடித்து வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தால் ஒரு வேளை சம்பளத்தில் இழுபறி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனாலேயேதான் அசோக் செல்வன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுங்கள். டப்பிங் பேச வருகிறேன் என கூறியிருப்பார்.

இதுவே பெரிய பெரிய நடிகர்களாக இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சின்ன நடிகர்கள் பட புரோமோஷனுக்கு வராததற்கு காரணமே இந்த மாதிரி தயாரிப்பாளர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் இருக்கிற பிரச்சினையால்தான். அதையும் மீறி புரோமோஷனுக்கு வராதவர்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினால் அஜித் மாதிரி பெரிய பெரிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.

Next Story