God of Love படத்தோட டைட்டில் இல்ல!.. STR51 -க்கு செம அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!...

by சிவா |
God of Love படத்தோட டைட்டில் இல்ல!.. STR51 -க்கு செம அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து!...
X

STR 51: சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. அப்பா டி.ஆர் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்கிற படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். ரஜினியை பின்பற்றி அவரை போலவே ஸ்டைல், மாஸ் எல்லாம் செய்து காட்டி அவருக்கென ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

தோல்வி படங்கள்: அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்தாலும் சரியாக படப்பிடிப்புக்கு போகாமல் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதறவிட்டு கெட்ட பெயர் வாங்கினார். இதனால் சில படங்கள் தோல்வியும் அடைந்தது. சில தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்தார்கள். ஆனால், சிம்பு அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

திடீரென சில வருடங்கள் காணாமல் போய்விடுவார். அதன்பின் வந்து ஒரு ஹிட் படம் கொடுப்பார். அப்படி அவர் நடித்து வெளியான விண்ணை தாண்டி வருவாயா மற்றும் மாநாடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பின் மார்க்கெட்டை பிடிப்பார் என எதிர்பார்த்தால் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களை கொடுத்துவிட்டு ஃபாரினுக்கு போய்விட்டார்.

வெளிநாட்டு பயணம்: அவரின் படம் வெளியாகி 2 வருங்கள் ஆகிவிட்டது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் செய்தி மட்டுமே வெளியாகி வந்தது. அதன் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயங்க இப்போது சிம்புவே அந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது சிம்புவின் 50வது படமாக வெளிவரவிருக்கிறது.

சிம்பு 51: சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய அருண்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். அடுத்து தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கும் சிம்புவின் 51வது படத்தை ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய படங்களை இயக்கியுள்ள அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இந்த அறிவிப்பு சிம்புவின் பிறந்தநாளன்று God of Love என்கிற கேப்ஷனோடு வெளியானது.

எனவே, இதுதான் படத்தின் தலைப்பு என சிம்பு ரசிகர்கள் நினைத்தார்கள். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அஸ்வத் மாரிமுத்து ‘God of Love என்பது படத்தின் தலைப்பு இல்லை. அது படத்தில் சிம்பு சாரின் கதாபாத்திரம். பொதுவான ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் இந்த படத்தில் இருக்கும். ஃபேண்டஷி கலந்த கதை இது. அவர் கையில் போட்டிருக்கும் மோதிரம் படத்தில் ஒரு முக்கியமான அங்கம். கொஞ்சம் தீதும் குறைகளும் கொண்டதாகவே சிம்புவின் கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story