Cinema News
அவருக்கு கட்டம் சரியில்லை!.. ‘அமரன்’ படம் பிளாப் தான்… புரளியை கிளப்பிவிட்ட ஜோதிடர்…!
சிவகார்த்திகேயனுக்கு நேரம் சரியில்லை என்பதால் அவரின் அமரன் திரைப்படம் சற்று சரிவை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது என ஜோதிடர் கணித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார். ரஜினி, விஜய்க்கு அடுத்ததாக ஒரு நல்ல கமர்சியல் நடிகராக வலம் வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது சினிமா கெரியரில் வெளியான திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்களை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களுமே இவருக்கு நல்ல ஒரு வரவேற்பை கொடுத்துள்ளது. இவர் கடைசியாக நடித்த அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்தது.
அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் அமரன். இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். மேலும் சாய்பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் நாளை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள், ட்ரெய்லர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால் இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் தனியார் youtube நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிவகார்த்திகேயன் குறித்து பல விஷயங்களை பேசியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருந்ததாவது ‘நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினி, விஜய் போல் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருவார். ஏனென்றால் அவரது படங்கள் அனைத்துமே ஹியூமர் காமெடிகளில் பட்டையை கிளப்பும். இதனால் அவர் ஒரு வசூல் மன்னனாக வலம் வருவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுவே அவர் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அந்த திரைப்படங்கள் ஓடுவது என்பது சந்தேகம்தான். அதேபோல தான் அமரன் திரைப்படமும் அமையும். அவருக்கு ராகு பலம் அதிகமாக இருப்பதால் திடீரென்று உச்சத்திற்கு செல்வார், திடீரென்று கீழே சருக்குவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. மேலும் சனி பலம் குறைவாக இருப்பதால் ‘அ’ என்ற எழுத்தில் படத்தின் பெயரை வைக்கும் போது சில குளறுபடிகள் வர வாய்ப்பு இருக்கின்றது. இதனால் படம் சற்று சறுக்களை சந்திக்கலாம்.
ஆனால் படுதோல்வி என்று கூடிவிட முடியாது. அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அவரது ரசிகர்கள் இந்த படத்தை தோல்வி அடைய விட மாட்டார்கள். இருப்பினும் சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது’ என அந்த ஜோதிடர் பேசி இருக்கின்றார்.