சார் ப்ளீஸ்!. நீங்க மனசு வச்சா!.. மகேஷ்பாபுவிடம் பிட்டை போட்ட டிராகன் பட இயக்குனர்!...

Dragon: கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் அஸ்வத் மாரிமுத்து. இவரின் சில குறும்படங்கள் பாராட்டையும் பெற்றது. இவரின் ஒரு குறும்படத்தை பார்த்த வெற்றிமாறன் ‘இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த பையன் நல்ல ரைட்டரா வருவான்’ என சொன்னார்.
ஓ மை கடவுளே: அது பின்னாளில் அப்படியே நடந்தது. அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்கிற திரைப்படத்தை இயக்கினார். நீண்ட நாள் தோழியாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ திருமணத்திற்கு பின் அந்த பெண்ணின் அப்பா அதாவது மாமனார் செய்யும் தொழில் பிடிக்காமல் விவாகரத்து கேட்பார். ஆனால், அது தவறு என்பது ஒரு கட்டத்தில் தெரியவரும்.
அப்போது கடவுள் அவருக்கு 2வது வாய்ப்பு கொடுக்க என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த கதைக்கு மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைந்திருந்தார் அஸ்வத் மாரிமுத்து. கதாநாயகியாக ரித்திகா சிங்கும், கடவுளாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்கள்.
தெலுங்கில் டிராகன்: இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்கிற படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. 12 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தொட்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது.
எனவே, டிராகன் படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு தியேட்டர்களில் ஓடி வருகிறது. இதற்கு புரமோஷன் செய்ய படக்குழு இப்போது ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், செய்தியாளர்கள் முன்பு பேசிய அஸ்வத் மாரிமுத்து ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.
மகேஷ்பாபு: ஓ மை கடவுளே வெளியானபோது அப்படத்தை பாராட்டி மகேஷ் பாபு ஒரே ஒரு டிவிட் போட்டார். உடனடியாக தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாட துவங்கிவிட்டனர். அதேபோல், டிராகன் படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நிச்சயமாக இந்த படம் அவருக்கு பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசியிருக்கிறார்.