சூர்யாவை தொடர்ந்து கழண்டு கொண்ட லோகி... என்ட்ரி கொடுக்கும் நயன் தம்பி... SK-வின் அடுத்த ப்ராஜெக்ட்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:26  )

நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் அடுத்த திரைப்படத்திலும் சூர்யாவை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். சுதா கோங்குரா புறநானூறு என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு இந்த திரைப்படத்தை சூர்யாவின் டூடி நிறுவனமே தயாரிக்க இருந்தது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புறநானூறு திரைப்படம் சற்று பெரிய படம் என்பதால் அதிக கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. நடிகர் சூர்யாவோ அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் இந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.

ஏனென்றால் நடிகர் சூர்யா தற்போது தான் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் புறநானூறு திரைப்படத்திற்கு அதிக அளவு கால்சீட் கொடுக்க முடியாத சூழல் உருவானதால் சூர்யா இந்த திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு சுதா கோங்குரா முடிவு செய்திருந்தார்.

இதற்கான கதையை சிவகார்த்திகேயனிடம் கூறிய நிலையில் அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் லோகேஷ் கனகராஜூம் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அதற்கு அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல் உருவானது.

இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு முன்னணி நடிகரின் மகனை அணுகி இருக்கின்றார்கள். அதாவது முரளியின் மகனான அதர்வாவிடம் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்போது அதர்வா இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட காரணத்தால் விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவதால் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு புறநானூறு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகின்றது. அதற்கு முன்பாக படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை இயக்குனர் சுதா கோங்குரா செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story