Categories: Cinema News latest news rajini kamal

லோகேஷா? நெல்சனா? அட்லியா?!.. ரஜினி – கமல் படத்தை எடுக்க செம போட்டி!….

பல வருடங்களுக்குப் பின் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கப் போகும் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் சினிமா உலகினரிடமும் இருக்கிறது. ரஜினி, கமல் இணைந்து நடித்து கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது பெரிய நடிகர்கள் இணைந்து நடிக்கும் பேன் இந்தியா படங்கள் வந்து விட்டதால் இருவரும் இணைவோம் என்கிற எண்ணம் இருவருக்குமே வந்திருக்கிறது. ஏனெனில் இப்போது நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லி போன்ற இயக்குனர்கள் வந்துவிட்டார்கள்.முதலில் ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கப்போகும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என சொல்லப்பட்டது.

ஆனால், கூலி எதிர்பார்த்தபடி போகவில்லை என்பதாலும், லோகேஷ் சொன்ன கதை அதிக வன்முறைகளைக் கொண்ட கதையாக இருந்ததாலும் ரஜினிக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் கடந்த பல வருடங்களாகவே ரத்தம் தெறிக்கும் ஆக்சன் காட்சிகளை கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரஜினிக்கு சலிப்பு தட்டி விட்டது. அதேநேரம் தனக்கு விக்ரம் ஹிட் கொடுத்தவர் என்பதால் லோகேஷ் இயக்கினால் சரியாக இருக்கும் என கமல் நினைக்கிறாராம். ஆனால் ரஜினி பிடி கொடுக்கவில்லை.

ஒருபக்கம் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் நெல்சன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துப்போக அந்த கதையிலேயே கமலுடன் இணைந்து நடிக்கலாம் என அவர் நினைக்கிறாராம். ஆனால் முழு கதையும் உருவாக இன்னும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள். கமலுக்கு அதில் விருப்பமில்லை. ஒருபக்கம் அட்லியும் இப்போது இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார் என்கிறார்கள்.

ரஜினி கமல் இணையும் தொடர்பான கதை மற்றும் பட்ஜெட் ஆகியவற்றை அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அவருக்கும் ரஜினி – கமல் இருவரையும் வைத்து படமெடுக்கும் ஆசை இருக்கிறது. ரஜினி சாரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார்.

இப்படி யார் இயக்குனர் என்பது முடிவாகாமல் இருப்பதால்தான் இதுவரை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்கிறார்கள். மொத்தத்தில் ரஜினி கமல் இணையப் போகும் படத்தை இயக்கப் போவது லோகேஷா? நெல்சனா? இல்லை அட்லீயா என்பது இன்னும் சில மாதங்களில் தெரியவரும்.

Published by
ராம் சுதன்