அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் மியூசிக் டைரக்டர் இவரா? ஓவர் பில்டப் தலை தப்புமா?

Allu Arjun: அல்லு அர்ஜூன் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் அட்லீ இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்கிறது.
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே இயக்கும் எல்லா படங்களுமே வெற்றியாக அமையும். அப்படி ஒரு இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் அட்லீ. அவர் இயக்கத்தில் தமிழில் வெளியான எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் அடிக்க பாலிவுட்டில் ஷாருக்கானை கடைசியாக இயக்கினார்.
விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஷாருக்கான் நடிப்பில் மற்றொரு ஆயிரம் கோடி திரைப்படமாக அமைய அட்லீயின் கேரியர் உயர்ந்தது. இதைத்தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வந்தது.
பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து அட்லீ படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அப்படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய வேடம் நேற்று நடிக்க இருப்பதாகவும், ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சல்மான்கான் தற்போது அப்படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பல மாதங்கள் முன்னரே அல்லு அர்ஜூனுடன் அட்லீ இணையலாம் என கிசுகிசுக்கப்பட்டது தற்போது உண்மையாக இருக்கிறது.
இப்படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல ஆல்பம் சாங் ஹிட் அடித்த சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு ஆல்பம் பாடலால் வைரலான சாய் அபயங்கர் சமீபத்தில் மீனாட்சி சௌத்ரியுடன் இணைந்து சித்திரி புத்திரி என்ற ஆல்பம் வெளியிட அது ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. இருந்தும் அவர் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்திற்கும், ஆர் ஜே பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யா 45 திரைப்படத்திற்கும், சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்திற்கும், மலையாளத்தில் ஒரு படத்திற்கும் இவர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.