சல்மான்கான் - அட்லீ படத்திற்கு முட்டுக்கட்டை போட்டது இந்த தமிழ் ஹீரோதானாம்! ஆத்தாடி…

by ராம் சுதன் |

Atlee: இயக்குனர் அட்லீயின் இயக்கத்தால் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் சல்மான்கான் நடிக்க இருந்த நிலையில் தற்போது அப்படம் நடக்காமல் போனதற்கு கோலிவுட் ஹீரோ ஒருவர்தான் காரணம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை அட்லீ இயக்கிய திரைப்படங்களுக்கு விமர்சன ரீதியாக ரசிகர்கள் கலாய்த்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சூப்பர்ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான விஜயை மட்டுமே வைத்து 3 படம் வரை இயக்கி இருக்கிறார்.

தொடர்ந்து, அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கினார். அப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்தார். தொடர்ந்து அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமலே இருக்கிறது.

முதலில் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான்கான் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இரண்டு டாப் ஹீரோக்கள் இணையும் சரித்திர படமாக உருவாக்க முடிவெடுத்தனர்.

இன்னொரு பிரபலத்தினை தமிழ் ஹீரோ கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தாக இருக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர். சல்மான்கானும் இதற்கு சம்மதம் தெரிவித்து இரண்டு மொழிகளின் டாப் ஹிட் பிரபலத்தை வைத்து பிரபலப்படுத்தினால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

இன்னொரு ஹீரோ சல்மான்கானின் அப்பாவாக நடிக்கும் கேரக்டராம். இதற்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளாமல் போய் இருக்கிறார். ரஜினிகாந்த் கூலி, ஜெயிலர் 2 என 2026 வரை அவர் பிஸியாக இருக்கிறாராம். இதை தொடர்ந்து சல்மான்கானுடன் வேறு தமிழ் ஹீரோ செட்டாக மாட்டார்கள் என படக்குழு முடிவெடுத்தது.

இதனால் சல்மான்கான் மற்றும் அட்லீ கூட்டணி இணையாமல் படம் முடங்கியதாம். தற்போது அட்லீ அல்லு அர்ஜூன் படத்தில் இணைய இருக்கிறார். அப்படத்திலும் இரண்டு ஹீரோக்கள் என்பதால் இன்னொரு தமிழ் ஹீரோவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story