அட்லீக்கு இப்படி ஒரு ஆசை இருக்க கூடாது… ஏ6ல் 100 கோடி சம்பளம் கேட்பது இதற்குதானாம்!

Atlee: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ தன்னுடைய அடுத்த படத்துக்கு பெத்த சம்பளம் கேட்பது குறித்த பின்னணி தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ தொடர்ச்சியாக சூப்பர்ஹிட் படங்களை இயக்கி வருகிறார். கோலிவுட்டில் தொடங்கிய அவர் பாலிவுட் வரை இயக்கி ஷாருக்கான் நடிப்பில் ஜவானை 1000 கோடி படமாக சூப்பர்ஹிட்டாக்கினார்.
அதை தொடர்ந்து பாலிவுட்டில் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறினார். தமிழில் அவர் இயக்கிய தெறி படத்தினை இந்தியில் ரீமேக் செய்து வெளியிட்டார். ஆனால் அப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது.
இதை தொடர்ந்து அட்லீ மீண்டும் தன்னுடைய ஆறாவது படத்தினை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்து கொண்டு இருக்கிறது. முதலில் இப்படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர் இரண்டு ஹீரோ கதை கேட்டதால் ரஜினி மற்றும் கமலிடம் பேசப்பட்டது.
ஆனால் அவர்கள் முடியாது எனக் கூறியதால் சல்மான்கான் படத்தில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அட்லீ தற்போது அல்லு அர்ஜூனை இயக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முதலில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அட்லீ மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தினை இயக்க இருப்பது மட்டுமல்லாமல் 100 கோடி சம்பளத்தையும் கேட்டார். இதை கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் நழுவி கொண்டது. தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அவர் ஏற்கனவே கேம் சேஞ்சரில் பெருத்த அடி வாங்கி இருக்கிறார்.
அட்லீ சம்பளத்தை கேட்டவுடனே பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆனால் 10 கோடி வாங்கிய அட்லீ இத்தனை பெரிய சம்பளம் கேட்பதற்கு காரணம் தன்னுடைய தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் தயாரிப்பில் பெரிய நஷ்டமாம். அந்த நஷ்டத்தை ஈடுகட்டவே இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம்.
இதை கேள்விப்பட்டு வரும் ரசிகர்கள் நீங்களா தயாரித்து இப்படி அடுத்தவங்க மேல வைக்கிறது? வெவரம்தான் என அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.