இளையராஜாவின் காரை வழிமறித்து ஆட்டோ ஓட்டுனர் சொன்னது!... ஆடிப்போன இசைஞானி!..

by சிவா |
இளையராஜாவின் காரை வழிமறித்து ஆட்டோ ஓட்டுனர் சொன்னது!... ஆடிப்போன இசைஞானி!..
X

Ilayaraja: இளையராஜாவின் இசை பலருக்கும் மன ஆறுதலாக இருக்கிறது. பலரின் மனக்காயங்களுக்கும் மருந்து போடுகிறது. சந்தோஷம் மட்டுமில்லை. காதல் தோல்வி, வாழ்வில் விரக்தி, சோகம், கண்ணீர், துன்பம், மன உளைச்சல் போன்ற சூழ்நிலைகளில் மனம் வாடும்போது அவரின் இசைதான் ஆறுதல் படுத்துகிறது.

மனதிற்கு மருந்து: மது ஒரு போதை என்பதை போல இளையராஜவின் இசையும் பலருக்கும் போதையாகவே இருக்கிறது. 70,80களில் பிறந்த பலரும் இப்போதும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசிக்கிறார்கள். 40 வயதை தாண்டியவர்கள் காரில் பயணிக்கும்போது ராஜாவின் இசைதான் வழித்துணையாக வருகிறது.

வாழ்வோடு ஒன்றிய இசை: அந்த அளவுக்கு ரசிகர்களின் வாழ்வோடு ஒன்றி போயிருக்கிறார் இளையராஜா. அவ்வளவு பாடல்களை கொடுத்திருக்கிறார். ராஜாவின் இசை மிகவும் எளிமையானது. அதேசமயம் ரம்மியமானது. அதனால்தான் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்போதோ அவர் போட்ட ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை வைத்து ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்கிற படத்தை இயக்கி 200 கோடி வருமானத்தை ஈட்டினார்கள். இது ராஜாவின் வெற்றி மட்டுமே.

இளையராஜாவின் இசை மனதிற்குள் இருக்கும் மிருகத்தை கொன்று சாந்தப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள். இளையராஜாவின் இசை மட்டும் இல்லையென்றால் பலரும் பைத்தியமாக கூட மாறியிருப்பார்கள். அல்லது குற்றங்களை செய்து சிறைக்கே சென்றிருப்பார்கள்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த இளையராஜாவிடம் ‘உங்கள் இசையை மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். உங்கள் பாட்டை கேட்டு விட்டு தூங்குகிறார்கள். இரவில் வேலை செய்யும் மக்களும் உங்கள் பாட்டை கேட்கிறார்கள். இதை முரணாக பார்க்கிறீர்களா?’ என கேள்வி கேட்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுனர்: அதற்கு பதில் சொன்ன இளையராஜா ‘ அவர்களுக்கு வேறு வழியில்லை. என் பாட்டைத்தான் கேட்க வேண்டும். ஒருமுறை ஒரு சிக்னலில் என் கார் நின்று கொண்டிருந்தது. ஒரு ஆட்டோக்காரன் நான் காரில் இருப்பதை பார்த்துவிட்டான். ஓடி வந்து ‘சார் உங்க பாட்டும் மட்டும் இல்லன்னா என் பொண்டாட்டிய என்னைக்கோ அடிச்சி கொன்னுருப்பேன் சார்’ என சொன்னான். இதற்கு நான் என்ன பதில் சொல்வது?’ என சிரித்துக்கொண்டே பதில் கூறியிருக்கிறார்.

Next Story