தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக பார்க்கப்பட்டவர் நடிகர் ரகுவரன். ஆரம்பத்தில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் தான் இவர் இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார். ஆனால் காலம் இவரை வில்லனாக மாற்றியது. ஆனால் ஹீரோவாக நடித்து பெரும் புகழை விட வில்லனாக நடித்து ஏகப்பட்ட பேரையும் புகழையும் பெற்றார் ரகுவரன். இன்று எத்தனையோ வில்லன் நடிகர்கள் வந்தாலும் இவருக்கு ஈடு இணை யாருமே கிடையாது.
இன்றுவரை இவருடைய படங்களை மக்கள் நினைவுக் கூர்ந்து தான் வருகின்றனர். ரகுவரன் போல வருமா என்று தான் அனைவருமே கேட்டு வருகின்றனர். ஒரு கேரக்டரை இவரிடம் விவரித்தால் அடுத்த நிமிடமே அந்த கேரக்டருக்காக தன்னை தயார்படுத்தி கொள்வார். வீட்டிலேயும் அந்த கேரக்டராகவே இவர் இருப்பார். அப்பொழுதுதான் படத்தில் அதை ரியலாக வெளிப்படுத்த முடியும் என்பது இவருடைய நம்பிக்கை.
இதனால் கூட இவருக்கும் இவருடைய மனைவி ரோகினிக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாகவும் ரோகிணி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இவரைப் பற்றிய சில நினைவலைகளை நடிகர் பப்லு பிரித்திவிராஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .ரகுவரனும் பப்லுவும் நெருங்கிய நண்பர்களாம். இரண்டு பேருக்குமே ஆரம்பத்தில் கேர்ள் பிரண்ட் இருந்ததாக பப்லு கூறினார்.
ரகுவரனின் ஒரே ஆசை எப்படியாவது ஒரு படத்திலாவது பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. அந்த காலத்தில் சிவாஜியிலிருந்து பலபேர் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்திருக்கின்றனர். அதை பார்த்து பப்லுவிடம் ரகுவரன் எனக்கும் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக ரகுவரன் கூறினாராம். ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமல் போனதாக பப்லு கூறினார் .
ஏகப்பட்ட விஷயங்களை இருவரும் பகிர்ந்து இருக்கிறார்கள். அதன் பிறகு பப்லு ஒரு படத்திற்காக வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் பொழுது நீண்ட நாளுக்கு பிறகு ரகுவரனை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது ரகுவரனை பார்த்த பப்லு அவர்கள் இருவரும் பேசிய சில விஷயங்களைப் பற்றி கேட்டிருக்கிறார். அது எதுவுமே ரகுவரனுக்கு ஞாபகம் இல்லாமல் போனதாம். அதற்கு காரணம் டிரக்ஸ் என பப்லு கூறினார். அந்த அளவுக்கு டிரக்ஸுக்கு அடிமையாகி போனார் ரகுவரன். அது அவருடைய மெமரியை முற்றிலுமாக எரித்து விட்டதாகவும் பப்லு கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…