Categories: latest news

‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பே பாலாவின் அந்த படத்தில் கமிட் ஆன அஜித்! இது ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

ஏற்கனவே அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே சில பல கருத்து வேறுபாடு ஏற்பட நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகினார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நான் கடவுள் படத்திற்கு முன்பே பாலாவுடன் இணைந்து அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம்.

இதைப் பற்றி சமீபத்திய ஒரு விழா மேடையில் இயக்குனரும் நடிகருமான அமீர் அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது வேற எந்த படமும் இல்லை. விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் தான். பாலா இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே அஜித் தான் நடிக்க வேண்டியது தாம் .

இதை பற்றி அமீர் கூறியது. 1993 ஆம் ஆண்டு இந்த படத்தின் கதையை அகிலன் என்ற பெயரில் உருவாகினாராம் பாலா. படத்திற்கான பூஜை காலையில் போடப்பட்டு மாலையிலேயே படம் ட்ராப் ஆகிவிட்டதாம். அதன் பிறகு இந்த கதையை எப்படியாவது படமாக்க வேண்டும் என்ற முயற்சியோடு போராடி இருக்கிறார் பாலா.

அப்போது மூத்த நடிகர்களாக இருந்த ரஜினி கமல் இவர்களை தவிர அனைத்து நடிகர்களும் இந்த படத்தின் கதைக்குள் வந்து வந்து போயிருக்கிறார்களாம் .அதில் இப்போது இருக்கும் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்தும் இந்த கதைக்குள் வந்தவர் தான். ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்காமல் போய்விட்டது.

அதன் பிறகு 1997 ஆம் ஆண்டு கந்தசாமி என்ற தயாரிப்பாளர் இந்த படத்தை நான் எடுக்கிறேன் என முன்வர அகிலன் என்ற பெயரை சேது என மாற்றி 12 வருடமாக வெற்றிக்கு போராடிக் கொண்டு இருந்த விக்ரமை இந்த படத்தின் கதாநாயகன் ஆக்கினார் பாலா. படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் நேரத்தில் பணமில்லாமல் படம் விற்பனை ஆகாமல் இருந்திருக்கிறது.

ஒரு சமயம் ஹேராம் ஷூட்டிங்கிற்க்கு வந்த கமல் இந்தப் படத்தின் கதையை அறிந்து ‘படத்தை பற்றி நான் கேள்விப்பட்டேன். படம் நன்றாக இருக்கிறதாமே. ரிலீஸ் ஆக என்னுடைய வாழ்த்துக்கள்’ என சொல்லிவிட்டு சென்றாராம். இதைப்பற்றி கூறிய அமீர் சேது திரைப்படத்தின் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் அந்த படத்தின் கதை உலகநாயகனிடம் போய் நல்ல முறையில் சென்று அடைந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது அப்போது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்பவே படம் பாதி வெற்றி அடைந்து விட்டதாக நாங்கள் உணர்ந்தோம் என அந்த விழா மேடையில் சேது படத்தின் உருவாக்க கதையை பற்றி கூறினார்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

2 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

3 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

3 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

3 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

6 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

7 hours ago