Categories: Cinema News

பாலையாவை விட பெரிய கேக்!.. குழந்தை தோத்துடும்!.. 65 வயசானாலும் சேட்டை குறையலையே!..

டோலிவுட்டின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாக உள்ள அகண்டா 2 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று அவர் தனது 65வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பாலகிருஷ்ணா தனது 14 வயதிலேயே ’தாத்தம்மா கலா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், மாஸ், ஆக்‌ஷன் மற்றும் வசனங்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த பாலகிருஷ்ணா 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகு மகாராஜ் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேறபை பெற்றது.

ஆந்திரவின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் புகழ்பெற்ற நடிகருமான N.T. ராமராவின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணா 1982இல் வசுந்திரா தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிராம்மணி, தேஜஸ்வினி என இரண்டு மகள்களும், மோக்ஷக்னா தேஜா என்ற ஒரு மகனும் உள்ளனர்.

மகன் மோக்ஷக்னா தேஜா இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கிய ’சிம்பா’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இதனிடையே பாலகிருஷ்ணாவின் பெயரில் 81.63 கோடி, மனைவி வசுந்திரா தேவி பெயரில் 140 கோடி, மகன் மோக்ஷக்னா தேஜா பெயரில் 58.63 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பாலகிருஷ்ணா தனது 65வது பிரந்தநாளில் தன்னை விட உயரமான கேக்கை வெட்டி மிக பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். அதில் சிறிய குழந்தை போல் ஒரே சிப்பில் தண்ணீர் குடிப்பது, கத்தியை சுத்திப் பிடிப்பது என பல வித்தைகளை செய்துள்ள வீடியோ வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Published by
Saranya M