Actor Murali: பெண்கள் சகவாசம்! சேர்க்கை சரியில்லை.. முரளிக்கு இருந்த பிரச்சினையே இதுதானாம்

Published on: November 7, 2024
---Advertisement---

90கள் காலகட்டத்தில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் முரளி. தமிழ் சினிமாவில் சகோதரர், ஹீரோ ,காதல் மன்னன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று தன்னுடைய நடிப்பின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் முரளி நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் மகன் அதர்வா நடிப்பில் வெளிவந்த பாணா காத்தாடி படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் .

அதுதான் அவர் நடித்த கடைசி படம். அறுபதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள முரளி பூவிலங்கு என்னும் திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவருடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருப்பது, 1990 இல் வெளிவந்த புதுவசந்தம் ,1991இல் வெளிவந்த இதயம் ஆகிய படங்கள்.

இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. கடல் பூக்கள் என்ற படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றார் முரளி. கடந்த 2010 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் காலமானார் முரளி. இந்த நிலையில் முரளியை பற்றி பாவா லட்சுமணன் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

பழகுவதில் மிகவும் தங்கமானவர் முரளி. மிகவும் நல்ல மனிதரும் கூட. ஆனால் அவர் பீக்கில் இருக்கும்போது சில பல விமர்சனங்கள் அவரைப் பற்றி எழுந்தது உண்மைதான். அதற்கு ஏற்ப அவரும் அப்படித்தான் இருந்தார். அதாவது பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதுவும் உண்மைதான்.

சில கெட்ட பழக்கங்களும் இருந்தன. இதுதான் அவருக்கு இருந்த பிரச்சனை. ஆனால் நாளடைவில் அதை திருத்தியும் கொண்டார் முரளி என பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment