கல்யாணத்துக்கு முன் லிவிங் டுகெதரில் சோபிதா!.. காதலர் இவரா?.. கொளுத்திப்போட்ட பயில்வான்..
கார்ஜுனா குடும்பம்:
தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஸ்வரராவ். இவரது மகன் நாகார்ஜுனா. இவரும் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் பிரபல தொழிலதிபரின் மகள் லக்ஷ்மி டகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. பின்னர் ஆறு வருடங்கள் கழித்து லட்சுமியை விவாகரத்து செய்த நாகார்ஜுனா அமலாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அகில் அக்கினேனி என்கின்ற ஒரு மகன் இருக்கின்றார்.
நாக சைதன்யா திருமணம்:
தனது தந்தையைப் போலவே தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகின்றார் நாக சைதன்யா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனை தொடர்ந்து நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டார் சம்பந்தத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் எளிமையாக நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி:
நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கின்றார் அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: " நாக சைதன்யா சமந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு முடிவு செய்த சிறிது நாட்களிலேயே நாகார்ஜுனா குடும்பத்தினர் தரப்பில் சமந்தா நடிக்க கூடாது என்று முடிவு செய்திருந்தார். அதன் பிறகு நாக சைதன்யா தான் எப்படியோ தனது பெற்றோரிடம் பேசி சமந்தா நடிப்பதற்கு சம்மதம் வாங்கினார்,
அதன் பிறகு சினிமாக்களில் பிஸியாக நடித்த வந்த சமந்தா ஓவர் கவர்ச்சியிலும் நடக்க தொடங்கினார். இது நாகார்ஜுனா குடும்பத்தினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் இது மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்க இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை சோபிதா துலிபாலா ஒன்றும் சாதாரண நடிகை கிடையாது. என்டியாருக்கும், நாகேஸ்வரராவுக்கும் பிரதான வில்லனாக நடித்தவர் தான் துலிபாலா. அவரின் மகள்தான் சோபிதா துலிபாலா.
கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு பிரபல தொழிலதிபருடன் லிவிங் டு கெதர்ரில் இருந்து வந்தார். அவர் யார் என்றால் பிரணவ் மிஸ்ரா. கோடி கோடியாய் சொத்து வைத்திருக்கும் அவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார் சோபிதா. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் பிரிந்து விட்டனர்.
அதன் பிறகு தான் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். சோபிதாவும் சமந்தாவை போல் கவர்ச்சி காட்ட தயங்காத ஒரு நடிகை. இயக்குனர் ஒரு 80 சதவீதம் கவர்ச்சி காட்ட சொன்னால் 90% கவர்ச்சியாக நடிக்க கூடியவர். தற்போது நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிக்க சென்றால் முதல் வாழ்க்கையில் எப்படி நாக சைதன்யாவுக்கு புயல் வீசியதோ அதேபோல் புயல் வீசினாலும் சொல்வதற்கில்லை' என்று அந்த வீடியோவை பேசி இருக்கின்றார்.