பப்-பில் உல்லாசம்... ஓவியாவுக்கு கொடி நோய் வேற இருக்காமே... சர்ச்சையை கிளப்பிய பிரபலம்...!
தமிழ் சினிமாவில் களவாணி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக அறிமுகமாகி ஒரு நல்ல அடையாளத்தை பெற்றவர் நடிகை ஓவியா. இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இதனால் தமிழில் அடுத்தடுத்து ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார். சிவகார்த்திகேயனுடன் மெரினா, மதயானை கூட்டம், மூடர்கூடம், கலகலப்பு, முத்துக்கு முத்தாக உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு மிகப் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியிலிருந்து இவராக வெளியேறினாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. ஓவியா ஆர்மி என்கின்ற பெயரில் எக்கச்சக்க ஆதரவை கொடுத்து வந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பெரிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
90 ML , களவாணி 2, பூமர் அங்கிள் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் சொல்லும் அளவிற்கு ஹிட்டு கொடுக்கவில்லை. ஓவியாவின் பேச்சு தான் அவருக்கு பல ரசிகர்களை கொடுத்தது. பல பேட்டிகளில் தனது மனதில் பட்டதை சற்று என்று கூற கூடிய ஒரு நபர். இந்நிலையில் ஓவியாவின் ஒரு சர்ச்சை வீடியோ சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வந்தது. அதனை நெட்டிசன்கள் பலரும் டிரெண்டாக்கினார்கள்.
மேலும், நெட்டிசன் ஒருவர் ஓவியாவின் போஸ்ட் ஒன்றில் வீடியோ பற்றி நக்கலாக பேச அதற்கு தரமான பதிலடிம் கொடுத்திருந்தார் ஓவியா. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்கு பேர் போன பயில்வான் ரங்கநாதன் தனது youtube சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீடியோவில் இருப்பது ஓவியா தான் எனவும், அவர் தாரிக் என்பவரை டேட்டிங் செய்து வந்தார். அப்படி டேட்டிக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன் ஓவியா குறித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றார். சமூக வலைதளங்களில் வெளியான சர்ச்சை வீடியோவை பார்த்த ஓவியா முதலில் இந்த வீடியோவில் இருப்பது நான் தான் என்று சொன்னார். பிறகு இந்த வீடியோ தொடர்பாக புகார் கொடுத்திருக்கின்றார்.
இதனால் போலீசார் தாரிக்கை தீவிரமாக தேடி வருகிறார்கள். ஆனால் தாரிக் தற்போது இந்தியாவிலேயே இல்லை துபாயில் இருக்கின்றார். அதேபோல் ஓவியாவும் புகார் கொடுத்துவிட்டு பேங்க்காக் சென்று பப்பில் சரக்கு பாட்டிலுடன் உல்லாசமாக இருந்து வருகின்றார். மேலும் ஓவியாவுக்கு ஒரு கொடிய நோய் இருக்கின்றது. ஓவியாவுக்கு மன உளைச்சல் வந்து பிறகு மனப்பிறழ்வாகி அது இப்போது மன நோயாக மாறிவிட்டது என்று பேசி இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.