கேம் ஆடிய இயக்குனர்!.. டிடிஎஃப் வாசனுக்கு நடந்த துரோகம்!.. பயில்வான் சொல்லும் புதுத்தகவல்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:11  )

கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் கையில் சுத்தமாக காசு இல்லாமல் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் படத்தை எடுக்க வந்தவர் தான் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செல்அம். மஞ்சள் வீரன் படத்தில் முதலில் பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் நடிப்பதாக இருந்து.

இப்போது கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்கிறார். டிடிஎஃப் வாசன் இந்த படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் அவர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவருடைய கவனம் வேறு பக்கம் உள்ளது என பல வகை குற்றங்களை அவர் மீது புகுத்தி டிடிஎஃப் வாசனை படத்திலிருந்து நீக்கியது படத்தின் இயக்குனரான செல்அம் தான்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதை பற்றி பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது மஞ்சள் வீரன் படத்தை ஆரம்பிக்கும்போது இயக்குனர் செல்அம் டம்மி பீஸாகத்தான் இருந்தாராம்.

படத்திற்கான புரோமோஷன் செலவு, பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கான செலவு என அனைத்தையும் டிடிஎஃப் வாசனேதான் கொடுத்திருக்கிறார். டிடிஎபஃப் வாசனை பொருத்தவரைக்கும் அவர் பைக் ரேஸ் கார் ரேஸில் சிறந்தவர். அது மட்டுமல்ல youtube சேனல் மூலமும் அவருக்கு சில வருவாய் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் பொருளாதாரத்தில் ஓரளவு நல்ல முன்னேற்றம் அடைந்தவராக தான் டிடிஎஃப் வாசன் இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருஷம் படத்திற்காக இவர் தான் பணத்தை கொடுத்து செலவு செய்து வந்திருக்கிறார். ஆனால் செல்அம் சூட்டிங்கே போகவில்லையாம்.

இதனால் டிடிஎஃப் வாசன் பணத்தை கொடுப்பதை நிறுத்தியுள்ளார். இதனால்தான் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார் என ரங்கநாதன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல கூல் சுரேஷ் இப்போது ஹீரோவாகி இருக்கிறார். அது சம்பந்தமான பிரமோஷன் கூட சமீபத்தில் நடந்தது.

அந்த பிரமோஷனுக்கு கூட கூல் சுரேஷ் தான் நாற்பதாயிரம் கொடுத்ததாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை, கூல் சுரேஷை பொருத்தவரைக்கும் அவருக்கு என ஓபனிங் கிடையாது. அவரை நம்பி யார் பணத்தை போடுவார்கள். ஆக மொத்தம் படம் குண்டக்க மண்டக்கா தான் என பயில்வான் ரங்கநாதன் கூறுகிறார்.

Next Story