இங்க 7 பேரு.. மலையாளத்துல 2 பேரா? மீனா பற்றி பயில்வான் ரெங்கநாதன் சொன்ன தகவல்

by ராம் சுதன் |

நடிகை மீனா: தென்னிந்திய சினிமாவில் 90களில் கலக்கியவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து அப்பவே மிகவும் புகழ் பெற்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிறமொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. கண்ணழகி மீனா என்றேதான் இவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த நடிகை: தமிழில் ரஜினியுடன் நடித்த வீரா, முத்து, எஜமான் என நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட். ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அவருக்கே ஜோடியாக நடித்தார். ரஜினி மீனா ஜோடிதான் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற ஜோடி. ரஜினி ஸ்ரீதேவி இவர்கள்தான் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் ரசிகர்களால் கவரப்பட்ட ஜோடி என்றால் ரஜினி மீனாதான்.

அதை போல் மற்ற மொழிகளில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் மோகன்லால், மம்மூட்டி, பாலையா என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மீனா கணவர் இறந்த பிறகு ரியாலிட்டி ஷோக்களில் ஆர்வம் செலுத்தி வருகிறார். ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்.

பிரபுதேவா நடன நிகழ்ச்சி: சமீபத்தில் நடந்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேடையில் நடனமாடினார் மீனா. சினிமாவில் தோழிகளாக இருக்கும் சங்கவி, சங்கீதா, ஸ்ரீதேவி, இவர்களுடன் தான் அதிகமாக தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பட விழாவில் பயில்வான் ரெங்க நாதன் மீனாவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார்.

மலையாள சினிமாவின் போக்கு: தமிழ் சினிமாவை விட மலையாள சினிமா ஏன் முன்னேறி போகிறது என்பதற்கு சில காரணங்களை கூறியிருந்தார். மலையாள சினிமாவில் ரஜினி , கமலுக்கு இணையான புகழை கொண்டவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். ரஜினிக்கு இங்கு சம்பளம் இங்கு 200 கோடி வரை கொடுக்கப்படுகிறது. ஆனால் மலையாளத்தில் 10 கோடிக்கு மேல் தாண்டுகிறார்களா என்பதே சந்தேகம் தான்.

ஏனெனில் மலையாளத்தில் கதைக்கு படத்திற்கான செலவுக்குத்தான் பணத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். அதனால்தான் சமீபகாலமாக நல்ல கதையுள்ள படங்கள் மலையாளத்தில் வந்து கொண்டு இருக்கின்றன. ஒரு படத்தில் நடிக்க பயில்வான் போகும் போது அந்த படத்தில் மீனாவும் இருந்தாராம். அவருக்கு உதவியாளராக இரண்டு பேர்கள் தான் இருந்தார்களாம்.

ஆனால் அவ்வை சண்முகி படத்தில் நானும் நடித்தேன். அப்போது மீனாவுக்கு உதவியாளராக 7 பேர் இருந்தார்கள். இதுதான் மலையாள சினிமாவிற்கும் தமிழ் சினிமாவிற்கும் உள்ள வித்தியாசம் என பயில்வான் கூறினார்.

Next Story