Categories: latest news

பென்ஸ் படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல மல்லு நடிகர்… எல்சியூவின் அடுத்த அதிரடி!

Benz: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தொடர் வரிசை படங்களான எல்சியூவின் அடுத்த படமாக உருவாகி வரும் பென்ஸ் படத்தின் வில்லன் அறிவிப்பு இன்று வர இருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு ஹாலிவுட்டை போல தொடர் வரிசை படங்கள் முதன்முதலாக உருவாக்கிய பெருமை லோகேஷ் கனகராஜையே சேரும். அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படம் வந்தது.

அந்த சமயத்தில் படத்தினை பார்க்க வருபவர்கள் கைதியை பார்த்துவிட்டு வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் படங்கள் எல்சியூ என அழைக்கப்பட்டு வருகிறது. அவரும் இதற்காக ஒரு பெரிய கதையை உருவாக்கி சின்ன சின்ன படங்களாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கைதி2, ரோலக்ஸ், விக்ரம் 3 உள்ளிட்ட படங்கள் வெளிவருவதற்கு முன்னர் சின்ன கதாபாத்திரங்களுக்கான ரோல்களும் ரெடியாகப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எல்சியூவின் அடுத்த படமாக பென்ஸ் உருவாகி வருகிறது.

முதன்மை படங்களை மட்டுமே லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் இந்த படத்தினை பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகவா லாரன்ஸ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் நடிகர்கள் அறிவிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முக்கிய நடிகருக்கான போஸ்டரை வெளியிட்டு நீங்க இதற்கு ரெடியாகி இருக்க மாட்டீங்க எனக் குறிப்பிட்டு நடிகருக்கு என் என்ற க்ளூவை கொடுத்து இருக்கின்றனர்.

இதனால் மலையாள நடிகர் நிவின் பாலியாக தான் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பலரும் எதிர்பார்க்கும் இந்த அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் கதை என்பதால் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளபடி இவர் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ வீடியோவும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

12 hours ago