Categories: latest news

அந்த பிரச்னையில் சிக்கிய லோகேஷ் கனகராஜ்… ஸ்டார் படம் இனிமே நடக்க வாய்ப்பே இல்லையாமே?

Lokesh Kanagaraj: கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படத்துக்கு பெரிய சிக்கலை சந்திக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே இயக்கும் எல்லா படத்துக்குமே வெற்றியை பெற்று விடுவார்கள். அப்படி ஒரு இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கத்தில் தொடர்ச்சியாக படம் வெளிவருகிறது.

மாநகரம் திரைப்படம் சுமார் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து கைதி திரைப்படத்தினை இயக்கினார். படம் ஒருநாள் இரவு கதை என்பதாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்தே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகி இருக்கிறார்.

கமல்ஹாசனை வைத்து விக்ரம், விஜயை வைத்து லியோ என லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியாகிய எல்லா படங்களுமே லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்ற அடிப்படையில் ஒரு படத்தை இன்னொரு படத்துடன் கனெக்ட் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருந்தார்.

இதை பலரும் ஆச்சரியமாக பார்க்கப்பட லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் ஹிட்டடித்து இருந்தார். தற்போது ரஜினிகாந்த் இயக்கத்தில் கூலி படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் எல்சியூ கதையுடன் ஒன்றாமல் தனிக்கதையாக இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எல்சியூ அப்படியே விடப்படுமா என யோசித்து கொண்டிருக்கையில் அதற்கு ஒரு வழியை முடிவெடுத்தார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் எல்சியூவிற்கான படங்களை தனியாக தயாரித்து வருகிறார். இதில் அவர் கதையை தற்போது பென்ஸ் படமாக உருவாக்கி வருகின்றனர்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பரபரப்பாக உருவாகி வந்த இப்படம் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பண பிரச்னையால் படத்தினை தொடர முடியாமல் போயிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

13 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago