பார்ட் 2-க்கு 'நியாயம்' சேர்த்த படங்கள் இதுதான்!
இந்தியன் 2 படம் வந்தாலும் வந்துச்சு சமூக வலைதளங்கள்ல நெட்டிசன்கள் ரொம்பவே ஆக்டிவா இருக்காங்க. பின்ன நல்லா இருக்க படத்தையே தியேட்டர்ல ஓடும்போது மேலோட்டமாவும், ஓடிடியில வர்றப்போ கொஞ்சம் கூட கருணையே கட்டாமயும் அலசிக் காயபோடுற ஆளுங்களுக்கு இந்தியன் 2 மாதிரி படங்கள் ஒரு வரப்பிரசாதம் தான.
இருபத்தெட்டு வருஷம் கழிச்சு வெளியான படத்த இந்த அடி அடிப்பாங்கன்னு கமலே எதிர்பார்த்து இருக்க மாட்டாரு. நெட்பேக் வேலிடிட்டி அதிகம் ஆனாலும் பரவால்லன்னு எல்லாருமே ரொம்ப பிஸியா எலான் மாஸ்க், மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு எல்லாம் காசு சம்பாதிச்சு கொடுத்துட்டு இருக்காங்க.
இன்னும் அடுத்ததா இந்தியன் 3 வேற வருதாம். அத என்ன பாடு படுத்தப் போறாங்கன்னு தெரியல. ஆனா தமிழ் சினிமாவ பொறுத்தவரை பார்ட் 2 படங்களுக்கு ராசி இல்லேன்னு தான் சொல்லணும். சிங்கம் 2, கலகலப்பு 2 படங்கள் ஹிட் ஆனாலும் அந்த படங்களுக்கான சரியான பார்ட் 2 கதை அது இல்லேன்னு எல்லாருக்குமே தெரியும்.
ஏற்கனவே சாமி 2 படம் வெளியாகி சாமிங்கிற பர்னிச்சர மொத்தமா ஒடைச்சு விட்ருச்சு. இதுல அடுத்ததா துப்பறிவாளன் 2, ஜெயிலர் 2, டிமாண்டி காலனி 2, சர்தார் 2, கைதி 2, சூது கவ்வும் 2, விடுதலை 2, தனி ஒருவன் 2 அப்படின்னு ஏகப்பட்ட பார்ட் படங்கள் வரிசை கட்டி நிக்குது.
இதுல எந்த படம் முதல் பாகம் அளவுக்கு ஹிட்டடிக்கும்னு நாம கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பாக்கணும் அதே நேரம் முதல் பாகத்துக்கு நியாயம் சேக்குற மாதிரியான பார்ட் 2 படங்களும் வெளியாகி இருக்குங்குறது தான் இதுல ஹைலைட்.
ஆனா நம்ம தமிழ் சினிமால கெடையாது. மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகள்ல வெளியான திரிஷ்யம் 2, கேஜிஃஎப் 2 பார்ட் 2 படங்களுக்கு புது சரித்திரம் எழுதுன பாகுபலி 2 ஆகிய 3 படங்களும் தான் இதுவரைக்கும் 2-வது பாகத்துலயும் மொதல் பாகத்துக்கான சஸ்பென்ஸ தக்க வச்சிருந்த படங்களா இருக்கு.
இந்த லிஸ்ட்ல தமிழ் சினிமாவுல இருந்தும் முதல் பாகத்துக்கு நியாயம் சேக்குற மாதிரி படங்கள் வெளியாகுமா? அப்படிங்கிறத நாம கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.