இன்கம்டாக்ஸ் அதிகாரிகளையே அலற விட்ட எம்ஆர்.ராதா... தமாஷாகச் சொன்ன பாக்கியராஜ்

ராபர் பட ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார். விழாவில் அம்பிகா, ரம்பா உள்பட பலரும் கலந்து கொண்டு பாக்கியராஜின் பேச்சை சுவாரசியமாக ரசித்தனர். பாக்கியராஜ் நடிகர் எம்ஆர்.ராதா குறித்து சில கலகலப்பான சம்பவங்களைப் பேசினார். என்னன்னு பாருங்க.
திருடன்... திருடன்: இந்தப் படத்தோட டைட்டிலும் இம்பரஸாகத் தான் இருக்கு. திருடன்னு சொல்லும்போது எனக்குப் பிடிச்ச திருட்டு விஷயங்கள் ரொம்ப நான் ரசிச்சது. திருடன் படத்துல சிவாஜி சார் திருடிட்டுப் போற சீன் நான் ரொம்ப ரசிச்சது. இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் எம்ஆர்.ராதா வீட்டுக்குள் வரும்போது உடனே வீதியில வந்து 'ஐயய்யோ ஐயய்யோ'ன்னு கத்துனாரு.
நீங்கதான் காப்பாத்தணும்: என்ன எம்ஆர்.ராதா கத்துறாருன்னு எல்லாரும் வந்தாங்க. 'திருடன் வீட்டுக்குள்ள வந்துட்டான்'னு சொன்னாரு. 'என்னை மிரட்டுறான். நீங்கதான் காப்பாத்தணும்'னு சொல்லிக் கத்துனாரு. உடனே எல்லாரும் சேர்ந்து அவங்களை அடிச்சி என்னென்ன எல்லாம் எடுத்து வச்சிருந்தாங்களோ அதை எல்லாம் சேப்டியா கொண்டு வந்துட்டாரு.
இன்கம்டாக்ஸ் அதிகாரி: அன்னைக்கு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளுக்கு விழுந்த அடியால தான் அப்புறம் போலீஸ் இல்லாம அவங்க எங்கேயும் ரைடுக்கு போக மாட்டாங்க. திருடர்கள்னா அதுக்கு ஒரு வித்தியாசமான பிரெய்ன் வேணும். திருடன் லாவகமா திருடுவான். அதை மூளையைப் பயன்படுத்தி போலீஸ் கண்டுபிடிச்சிடுவான்.
ரைட்டர் மூளை: ரெண்டு பேரும் என்னென்ன செஞ்சிருப்பாங்கன்னு தெரிஞ்சி அவங்க ரெண்டு பேரையும் விட மூளையை பிரமாதமாப் பயன்படுத்தி லாயர் திருடனைக் காப்பாத்திடுவாரு. அவங்க செய்றதைக் கிரிமினல் அல்லது புத்திசாலித்தனமான மைன்டா எடுத்துக்கலாம். இதை எல்லாவற்றையும் விட மோசமான மைன்ட் இருக்கு. அவங்கதான் ரைட்டர். ஆனந்த் கிருஷ்ணா மாதிரி, என்னை மாதிரி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராபர்: மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணா. இவர்தான் ராபர் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். சத்யா, டேனியல், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.