விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. தற்போது 7 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 8வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கடந்த ஏழு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். இந்த சீசனை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
கடந்த ஏழு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் சற்று சுவாரஸ்யம் குறைவு என்று தான் கூற வேண்டும். கடந்த சீசனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதிலும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பெற்ற பிரதீப் ஆண்டனியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த இவரை பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி உலகநாயகன் கமலஹாசனிடம் முறையீடு செய்ய அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பிவிட்டார்.
ஆனால் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று கூறி பலரும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கினார்கள். இதனால் பிரதீப் ஆண்டனிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய வேலைகளில் பிஸியாக இருந்து வரும் பிரதீப் ஆண்டனி கடந்த ஜூன் மாதம் தனது காதலியான பூஜாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை தொடர்ந்து திருமணம் எப்போது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் இன்று தன்னுடைய காதலியை பிரதீப் ஆண்டனி திருமணம் செய்து இருக்கின்றார். முதலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை பட்டு வேட்டி சட்டையில் பிரதீப் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை சுரேஷ் தாத்தா வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் இன்று உங்களுக்கு திருமணமா? என்று தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
தற்போது கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் இவர்கள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
