சிம்பு மாதிரி ஆளுங்க நல்லா மண்டையில ஏத்திக்கோங்க!.. தனுஷோட பக்காவான பிளான்..!

by ramya suresh |
சிம்பு மாதிரி ஆளுங்க நல்லா மண்டையில ஏத்திக்கோங்க!.. தனுஷோட பக்காவான பிளான்..!
X

Actor Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது நிற்கக் கூட நேரமில்லாமல் பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அதிலும் இவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு பிறகு மிகவும் பிசியாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.

ராயன் திரைப்படம் கொடுத்த நம்பிக்கை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை தனுஷ் இயக்குவதற்கு ஊக்கம் அளித்து இருக்கின்றது. அந்த வகையில் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் தயாரிக்கவும் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் இவர் ஹீரோவாக நடித்து வருகின்றார். இவருடன் இணைந்து ராஜ்கிரண், நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருப்பதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து தனது திரைப்படங்களை இயக்கி வந்தாலும் கேப் கிடைக்கும் நேரங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தின் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படி பிஸியாக இருக்கும் தனுஷ் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வருகின்றார். தற்போது தமிழ் சினிமாவில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் குட் பேட் அக்லி திரைப்படத்துடன் இட்லி கடை திரைப்படம் மோதுவது தான்.

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகின்றது என்ற தகவல் வந்தவுடன் பலரும் எதிர்பார்த்தது இட்லி கடை திரைப்படம் நிச்சயம் தள்ளிப் போகும் என்றுதான். ஆனால் தனுஷ் அப்படி எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. நிச்சயம் ஏப்ரல் 10ம் தேதி இட்லி கடை திரைப்படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரரான பிஸ்மி சமீபத்திய பேட்டியில் தனுஷ் குறித்து பல விஷயங்களை கூறியிருந்தார். 'ஒவ்வொரு ஹீரோக்களும் தனுஷை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சினிமா வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற எல்லோ ஹீரோக்களுக்கும் முன்மாதிரியாக தனுஷ் இருகின்றார். அவரின் லைன் அப்பை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டே இருப்பார். அந்த திரைப்படம் முடியும் தருவாயில் வேறொரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருப்பார். அதற்குள் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரெடியாக இருக்கும். பின்னர் இங்கு வந்து அவரின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்.

ஒரு பக்கம் இயக்குனராக, நடிகராக, பாடல் ஆசிரியராக, பாடகராக, மற்றொரு பக்கம் தயாரிப்பாளராக அனைத்திலும் மிக சிறப்பாக தன்னுடைய வேலையை செய்து வருகின்றார். அதேபோல் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கேப் கிடைக்கும் நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களில் நடிப்பதற்கு சென்று விடுவார்.

இப்படி தன்னுடைய செட்டியூலை பக்காவாக பிளான் போட்டு வைத்திருப்பவர் தனுஷ். சிம்பு போன்றவர்கள் இதெல்லாம் மண்டையில் ஏற்றி கொள்ளவேண்டிய விஷயங்கள். தனுஷின் வெற்றி இவ்வளவு விரைவாகவும் உயர்வாகவும் இருப்பதற்கு இந்த டெடிகேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அதனால் தான் அவர் அஜித் திரைப்படம் வந்தாலும் பயமில்லாமல் தனது திரைப்படத்தை இறக்குவதற்கு இதுவும் ஒரு காரணம்' என்று கூறி இருக்கின்றார்.

Next Story