ஏ சோறு தூக்கி!.. பிளடி பெக்கரில் சர்ச்சையான வசனம் பேசும் கவின்!. வெளியான வீடியோ!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:44  )

Bloddy begger: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் கவினும் ஒருவர். விஜய் டிவியிலிருந்து பலர் வந்தாலும் அதில் சிவகார்த்திகேயன் மட்டுமே உச்சம் தொட்டவர். மற்றவர்கள் சில படங்களில் நடித்துவிட்டு வாய்ப்பு இல்லாமல் மீண்டும் டிவிக்கு சென்றுவிட்டனர். சிவகார்த்திகேயனுகு பின் கவின் நன்றாகவே வளர்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதன்பின் திரைப்படங்களில் ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக சில படங்களில் நடித்துவிட்டு கதாநாயகனாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த வீட்டில் இருக்கும்போது லாஸ்லியாவை காதலித்துவிட்டார். பிக்பாஸ் வீட்டிலேயே அந்த காதல் பிரேக்கப் ஆனது.

அந்நிகழ்ச்சிக்கு பின் லிப்ட் என்கிற படத்தில் நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு ஓடியது. அதன்பின் வெளிவந்த டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ஸ்டார் படம் வெளியானது. இந்த படத்தில் கவினுக்கு அதிக பில்டப் கொடுக்கப்பட்டது. அதோடு, திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

எனவே, படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதன்பின்னர்தான் நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். ஏற்கனவே, இப்படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

நெல்சனின் ஸ்டைலில் பிளடி பெக்கர் ஒரு டார்க் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் பிச்சைக்காரனாக இருந்தாலும் தாழ்வு மனப்பான்மை எதுவுமில்லமால் ஜாலியாக ரசித்து வாழும் கதாபாத்திரத்தில் கவின் கலக்கி இருக்கிறாராம். இந்நிலையில்தான், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி வீடியோக வெளிவந்துள்ளது.

சாப்பாடை டெலிவரி கொடுக்க வரும் யார் ஆர்டர் செய்தார் என தேடிக்கொண்டிருக்க ‘ஏ சோறு தூக்கி’ என கூப்பிட்டுவிட்டு ரீல்ஸ் வீடியோவுக்கு நடனமாடி கொண்டிருக்கிறார் கவின். அவர் ஆச்சர்யமாக பார்க்க ‘ஏன் நாங்கலாம் ஆர்டர் பண்ணக் கூடாதா?’ என கேட்கிறார். சொமோட்டோ, சுவிகி, உபேர் போன்ற ஆப்கள் மூலம் டோர் டெலிவரி செய்யும் நபர்களை ‘சோறு தூக்கி’ என கவின் சொல்வது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Next Story