bloody beggar - Brother: பிளடி பெக்கராவது பரவாயில்ல!.. அதள பாதாளத்தில் பிரதர்... 4 நாட்களில் எவ்வளவு கலெக்ஷன்..?
தமிழ் சினிமாவில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. மூன்று படங்களுமே வெவ்வேறு கதை அம்சங்களை கொண்ட படங்கள். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. 4 நாட்களில் மட்டும் 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் திரைப்படம் அமரன் திரைப்படத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கின்றது. இந்த திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இதில் மிகவும் பரிதாபமான நிலையில் இருப்பது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படம் தான்.
பிளடி பெக்கர்: இயக்குனர் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சிவபாலன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் பிளடி பெக்கர். இந்த திரைப்படத்தில் நடிகர் கவின், ராதா ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தில் கவின் ஒரு பிச்சைக்காரனாக நடித்திருக்கின்றார். கதாபாத்திரம் தொடங்கி 30 நிமிடங்கள் மட்டுமே பிச்சைக்காரனாக அவர் நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார்.
அதற்கு பிறகு அரண்மனைக்கு சென்று அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்று ரசிகர்கள் கூறி வந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் பாடல்கள் எதுவும் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்பட்டது.
இருப்பினும் படம் மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது தீபாவளிக்கு வெளியான மூன்று திரைப்படங்களில் மிக குறைந்த பட்ஜெட் படம் என்றால் அது பிளடி பெக்கர் திரைப்படம் தான். படம் குறைந்த அளவு தியேட்டர்களில் ரிலீசான காரணத்தால் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. படத்தின் மொத்த பட்ஜெட்டே பத்து கோடி என்ற நிலையில் படம் லாபம் தான். நான்காவது நாளான நேற்று இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சரிவை சந்தித்து இருக்கின்றது. நான்காவது நாளில் உலகம் முழுவதும் வெறும் ஒரு கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
பிரதர்: இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பிரதர். தீபாவளி பண்டிகைக்கு வெளியான மூன்று படங்களிலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது பிரதர் திரைப்படம் தான்.
முதல் பாதி மிகவும் மொக்கையாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி தான் ஓரளவுக்கு கதைக்குள் சென்றிருப்பதாக கூறி வருகிறார்கள். மேலும் படத்தில் சரியான கன்டினிட்டி இல்லை என்று விமர்சனங்கள் தெரிவிக்கின்றார்கள். தீபாவளி ரேசில் வசூலில் அதிக அடிவாங்கிய படம் பிரதர் தான். தீபாவளி போன்ற பெரிய விழாவுக்கு படத்தினை ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்தபோது அதற்கான சரியான ப்ரமோஷன் செய்திருக்க வேண்டும்.
ஆனால் படத்துக்கான எந்த பிரமோஷனும் செய்யாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவினை மிக சிம்பிலாக நடத்தினர். ஃபேமிலி சென்டிமென்ட் அதிலும் குறிப்பாக அக்கா தம்பி உறவைப் பற்றிய படம் என்பதால் அதனை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இளம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பேமிலி ஆடியன்ஸ்க்கு ஒரு சிறந்த படமாக தான் இது இருக்கின்றது. முதல் நாளில் இந்தியா முழுவதும் 3 கோடி வரை வசூல் செய்திருந்தது. 2வது நாளில் 2.5 கோடி வசூல் செய்திருந்தது. மூன்றாவது நாளில் 3 கோடி என சிங்கிள் டிஜிட்டில் மட்டும் வசூல் செய்து வந்த நிலையில் நேற்று வசூல் மிக மோசமாக இருந்தது. அந்த வகையில் படம் 4 நாட்களில் மொத்தமே 12 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.