தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி பிச்சைக்காரனா? ஓபனாக பேசிய பிரபல இயக்குனர்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:45  )

Kollywood: நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி குறித்து பிரபல இயக்குனர் தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது. கதையை தாண்டி சில நடிகர்களை படத்தில் ஒப்பந்தம் செய்தாலே வெற்றி வசூல் குவிக்கலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் குறித்து இயக்குனர் நெல்சன் பேசி இருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் தோல்வியை தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தினை நெல்சன் இயக்கி இருந்தார். அப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டது. இதற்கு நெல்சனின் வருமானமே உச்சமாக கிடைத்ததாம்.

அதை தொடர்ந்தே அவர் தற்போது பிளடி பெக்கர் படத்தினை தயாரித்து இருக்கிறார். இப்படத்தினை தயாரிக்க முடிவெடுத்த போது தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை ஹீரோவாக்க நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் இயக்குனர் அதற்கு மறுத்துவிட்டாராம்.

பட்ஜெட்டும் மிகப்பெரிய அளவில் உயரும் என்பதால் நெல்சனும் அந்த முடிவை கைவிட்டாராம். இதை தொடர்ந்தே இப்படத்தில் கவினை ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர். கவினும் தன்னுடைய முழு முயற்சியை போட்டு படத்தினை நடத்தி முடித்தனராம்.

படம் முடிந்ததும் அதை பார்த்த நெல்சனும் இந்த கேரக்டரில் கண்டிப்பாக கவின் தான் சரியான தேர்வு எனவும் புரிந்து கொண்டாராம். நேற்று வெளியான பிளடி பெக்கர் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story