கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கி இருக்காங்க போல!.. சூர்யாவை விடாமல் சீண்டும் பிரபலம்!...

by ராம் சுதன் |

Ganguva: நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் சில படங்களிலும் நடித்தாலும் பாலா, கவுதம் மேனன், ஹரி போன்ற இயக்குனர்களால் ஒரு முழு நடிகராக மாறினார். நந்தா, மவுனம் பேசியதே, காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்கள் சூர்யாவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

அதன்பின் பல இயக்குனர்களின் படங்களிலும் சூர்யா நடித்து விட்டார். சூர்யாவுக்கு ஒரு பழக்கம் உண்டு. தன்னை தூக்கிவிட்ட இயக்குனர்களின் படங்களிலேயே நடிக்க மறுத்துவிடுவார். கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்தார். சிங்கம், சிங்கம் 2 என தன்னை ஒரு கமர்சியல் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய ஹரியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க மறுத்தார்.

தன்னை ஒரு முழு நடிகனாக மாற்றிய பாலாவை வணங்கான் படத்தில் டீலில் விட்டார். சூரரைப் போற்று படம் மூலம் தேசிய அளவில் தன்னை கவனம் பெற வைத்த சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான புறநானூறு கதையை மாற்ற சொன்னார். ஆனால், சுதா கொங்கரா அதற்கு மறுக்கவே அந்த படத்திலிருந்து விலகினார்.

லிங்குசாமி இயக்கத்தில் பாட்ஷா ரேஞ்சுக்கு பில்டப் செய்து அஞ்சான் படத்தில் நடித்து ரசிகர்களை கதறவிட்டார். இந்த படம் கடுமையாக ட்ரோலில் சிக்கியது. படத்தை சமூகவலைத்தளங்களில் படத்தை கிண்டலடிக்காதீர்கள் என கோரிக்கை வைத்தார் சூர்யா. இதனால், விமர்சனங்களை சந்தித்தாலும் சூர்யா எதையும் கண்டு கொள்வதில்லை.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். கங்குவா படத்தின் முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தோடு வேறு சில படங்களும் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கங்குவா முதல் பாகத்தோடு எந்த படமும் ரிலீஸ் ஆகலாம். ஆனால், கங்குவா 2-வுக்கு போட்டியே இருக்காது. யாரும் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்’ என ஞானவேல் ராஜா சொல்லி இருந்தார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள புளூசட்ட மாறன் ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கி இருப்பாங்களோ’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.

சூர்யா நடித்து அஞ்சான் படம் வெளியானபோது ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்துல இறக்கி இருக்கேன்’ என அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமி சொன்னது ட்ரோலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story