Categories: Cinema News latest news

ப்ரோமோஷனில் ஒவரா பேசி பல்பு வாங்கிய படங்கள்.. லிஸ்ட் போட்டு காட்டிய ப்ளூசட்டை மாறன்

சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்து வருகின்றது. விஜய், ரஜினி ,கமல், சூர்யா ,அஜித் என அனைத்து பெரிய நடிகர்களின் படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி எதிர்பாராத தோல்வியை சந்தித்து வருகின்றன. லியோ படம் வசூலில் வாரி இறைத்தாலும் விமர்சன ரீதியாக பெரிய அளவில் அந்த படம் தோல்வியை சந்தித்தன.

அதேபோல கங்குவா திரைப்படமும் சூர்யாவின் கெரியரையே மாற்றி அமைக்கும் திரைப்படமாக இருக்கும் என ஒட்டுமொத்த கோடம்பாக்கமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் போட்ட முதலீட்டையே எடுக்க முடியாமல் அந்த படம் திணறியது. அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படமும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்த படம் ஆரம்பத்திலிருந்து நிறைய பிரச்சினைகளை எதிர் கொண்டு வந்தன.

அதுவே அந்த படத்தின் ப்ரோமோஷனாகவும் மாறியது. அதனால் விடாமுயற்சி திரைப்படம் கண்டிப்பாக ஒரு மாபெரும் வெற்றியையும் வசூலையும் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இல்லாத அஜித்தை இந்த படத்தில் ரசிகர்கள் பார்த்தனர். அது அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அஜித் என்றாலே ஓப்பனிங், மாஸ், ஆக்சன் இதுதான் அவருடைய பலம்.

ஆனால் இது எதுவுமே விடாமுயற்சி திரைப்படத்தில் இல்லை. அதுவும் அந்த படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தன. கடைசியாக வெளியான தக்லைப் திரைப்படமும் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மணிரத்தினம் ஸ்டைல் என்பதே இந்த படத்தில் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை பற்றி தன்னுடைய பாணியில் நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் விமர்சித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெறுபவர் ப்ளூ சட்டை மாறன்.

அவர் பட ப்ரொமோஷன் பரிதாபங்கள் என சில வசனங்களை லிஸ்ட் போட்டு காட்டியுள்ளார். அது என்னவெனில் பெரிய நடிகர்களின் பட ப்ரோமோஷனில் இந்த படம் ஆயிரம் கோடி பெறும் இது உலகத்தரம் வாய்ந்த படம் என்றெல்லாம் பேசி கடைசியில் படத்தில் ஒன்றுமே இருக்காது. அப்படி பிரமோஷனில் பெரிய அளவில் படத்தை வெற்றி பெறுவதற்காக என்னென்னலாம் பேசினார்கள் என்பதை லிஸ்ட் போட்டு காட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன் .

bluesattaimaran

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கி இருக்கேன், இது அமைதிப்புலி அதிசய புலி அடங்காப் புலி, அன்பான புலி, 40 பேர் கிட்ட கதை கேட்கிறப்ப தூங்கிட்டேன் ,ஆந்திர மக்களே பொன்னியின் செல்வன் உங்கள் படம், கங்குவா 1000 கோடி வசூல் உறுதி. சக்சஸ் மீட்டில் சந்திப்போம், முதல் முதல்ல சிக்ஸ் பேக் வைத்தது என் மகன் தான், இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்.

Published by
ராம் சுதன்