களைகட்டும் விஜய் மாநாடு.. ரஜினி ரசிகர்களின் ரியாக்ஷன் இதுதானா..? பிரபலம் சொன்ன தகவல்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆதிக்கம் செலுத்தி வந்த நடிகர் விஜய் திடீரென்று சினிமாவிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அதனை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். தற்போது கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி அன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கின்றது.
நிகழ்ச்சி நிரல்படி மதியம் 2 மணிக்கு மாநாடு தொடங்க உள்ளது. ஆனால் அதிகாலை முதலே தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாநாடு திடலில் கூடி வருகிறார்கள். காலை முதலே விஜய் ரசிகர்களின் ஆதிக்கம் தான் இணையதள பக்கங்களில் இருக்கின்றது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், செய்தி என எங்கு பார்த்தாலும் விஜய் மற்றும் விஜயின் மாநாடு குறித்த செய்திகள் மட்டும்தான் வலம் வருகின்றன.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் செய்த வேலை விஜய் ரசிகர்களை சற்று கோபமடைய செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்க்கும் விஜய்க்கும் ஏற்கனவே திரைத்துறையில் சண்டை நடைபெற்று வருகின்றது. இப்போது விஜய்-அஜித் ரசிகர்கள் போய் தற்போது விஜய்-ரஜினி ரசிகர்கள் மோதிக் கொண்டு வருகிறார்கள் .ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் போதும், லியோ திரைப்படத்தின் ரிலீஸ் போதும் இருவரின் ரசிகர்களும் மாறி மாறி அடித்துக் கொண்டார்கள்.
மேலும் ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கூறி பின்னர் வரவில்லை. ஆனால் நடிகர் விஜய் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று அரசியலில் குதித்து விட்டார். நடிகர் விஜயின் அரசியல் வருகை இன்றளவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று கூறி ஏமாற்றி விட்டார். ஆனால் நடிகர் விஜய் அரசியலில் துணிந்து இறங்கி இருக்கின்றார் என்று தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
இது ரஜினி ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் கட்சியின் மாநாடு தொடர்பான செய்திகள் தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுக்கின்றது என்று கூறி இருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்ததாவது 'தமிழக வெற்றி கழகம் மாநாடு, லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்கள், மீடியா முழுக்க தொடர் கவரேஜ், தலீவர் நவ் பகிர்ந்து இருக்கின்றார். மேலும் இன்று முழுக்க தமிழக வெற்றிக்கழக மாநாடு செய்திகளை, டிவி, சோசியல் மீடியாக்களில் பார்க்க மாட்டோம். மாலை 6 மணிக்கு ஜெயிலர் படம் மட்டுமே பார்ப்போம். ரஜினி ரசிகர்கள் சபதம் என்று பகிர்ந்து இருக்கின்றார். அதாவது ரஜினி ரசிகர்கள் விஜயின் மாநாடு தொடர்பான எந்த செய்திகளையும் பார்க்க மாட்டேன் என்று கூறியதாக இவர் பதிவிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.