எனது ப்ளடி பெக்கர் படம் இந்த இங்கிலீஷ் படத்தோட காப்பியா..? இப்படி ஏமாத்திபுட்டாங்களே..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:47  )

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து பிரபலமான நடிகர்களில் முதலிடத்தில் இருப்பது நடிகர் சிவகார்த்திகேயன். அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் இடத்தை பிடித்து வருகின்றார் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

டாடா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட நடிகர் கவினுக்கு ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. அதைத்தொடர்ந்து தற்போது பிளடி பெக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் கவின் பிளடி பெக்கர் திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி இருந்தன. ஆனால் இவர்கள் இருவரும் மாறி மாறி தங்களின் படங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். இது ஒரு ஆரோக்கியமான போட்டியாகவே பார்க்கப்பட்டது.

பிளடி பெக்கர் திரைப்படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு 20 நிமிடங்கள் அவர் பிச்சைக்காரனாக செய்யும் சேட்டை அனைத்துமே படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கின்றது. இரண்டாம் பாதியில் காமெடி கலாட்டாவாக தீபாவளிக்கு தியேட்டருக்கு செல்பவர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வெளியே அனுப்பி வைக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் தயாரித்திருக்கின்றார். முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் 2.2 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளது. கம்மி பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்துள்ள நெல்சன் தீபாவளி விடுமுறை முடிவதற்குள் போட்ட காசை எடுத்து விடுவார் என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கின்றார். இந்த திரைப்படம் Ready or Not 2019 ஆங்கில படத்தின் ரீமேக் என பேசி இருக்கிறார். மேலும் டார்க் காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால் எல்லாம் மொக்க காமெடியா இருக்கு.. திரைப்படம் சுத்தமாக செட்டாகவில்லை.. கவின் தொடர்ந்து தவறான இயக்குனர்களையும் கதைகளையும் தேர்வு செய்திருக்கின்றார் என்று அவரை திட்டி வருகின்றார் ப்ளூ சட்டை மாறன்.

Next Story