என்னது...! தளபதி 69 விஜயின் கடைசி படம் இல்லையா...? ப்ளூ சட்டை மாறனின் புதிய உருட்டு...!
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராகவும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் இவர் கடைசியாக கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மட்டும் இவர் 200 கோடி சம்பளம் வாங்கியதாக படத்தின் தயாரிப்பாளரே கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அடுத்த படமான தளபதி 69 படத்திற்கு 275 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. இவரின் சம்பளம் பாலிவுட் நடிகர்களின் சம்பளத்தை விட அதிகம் என்று கூறப்படுகின்றது. தளபதி 69 திரைப்படம் தான் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்று கூறி வருகிறார்கள். ஏனென்றால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், அதனை தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார். மேலும், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் முதல் மாநாட்டை நடத்த இருக்கின்றார். இந்த மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் பூஜை நேற்று நடைபெற்றது. நேற்று அந்த நிகழ்ச்சி மட்டும் இல்லாமல் தளபதி 69 திரைப்படத்தின் பூஜையும் நடைபெற்றது.
நடிகர் விஜய் தளபதி 69 படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்டிருந்தார். ஹெச் வினோத் இயக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். கேவிஎன் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தொடர்பான அப்டேட் கடந்த 3 நாட்களாக வெளியானது. அதன்படி இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடிக்க இருக்கின்றார்.
மேலும் பாபி தியோல், மம்தா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தோடு நடிகர் விஜய் தனது திரைப்பயணத்தை முடித்துக் கொண்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கின்றார் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் சினிமாவை சேர்ந்த பிரபலங்களும், மூத்த பத்திரிகையாளர்களும், நடிகர் விஜய்யின் கடைசி படம் இது அல்ல எனவும், தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அதன்படி மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி மீண்டும் விஜய் சினிமாவுக்கு வருவார் என்று தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் இயக்குனர் போஸ் வெங்கட் கூறுகையில் அரசியலில் அதிக பணம் செலவாகும்.
விஜய் பணம் சம்பாதிப்பதற்கு மீண்டும் சினிமாவிற்கு வருவார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் 2026 தேர்தல் முடிந்ததும் விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கருத்து பதிவிட்டு இருக்கின்றார். இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் மீண்டும் நடிப்பதற்கு வந்தால் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் அவர் தமிழகத்திற்கு நல்ல தலைவராகவும் வர வேண்டும் என்று தனது ஆசைகளை தெரிவித்து வருகிறார்கள்.