கூத்தாடினா இழிவா!.. இத கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்ல... ஓவரா பொங்குறாரே ப்ளூ சட்டை!..

by ramya suresh |
கூத்தாடினா இழிவா!.. இத கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்ல... ஓவரா பொங்குறாரே ப்ளூ சட்டை!..
X

விஜய்யின் அரசியல் என்ட்ரி:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கி இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். ஒரு பக்கம் தளபதி 69 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் சம்பந்தமான அனைத்து செயல்களையும் செய்து வருகின்றார்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அரசியல் கட்சிகள் குறித்து தாறுமாறாக விமர்சித்து பேசியிருந்தார். அதிலும் ஆளும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும் விமர்சித்து பேசி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வராததற்கு திமுக தான் காரணம் என்று பேசியிருந்தார். நடிகர் விஜய் மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆறு மாத காலம் நீக்கப்படுவதாக தொல் திருமாவளவன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக பல ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷானவாஸ் விஜயை குறித்து தருமாறாக பேசியிருந்தார். அப்போது அவரை கூத்தாடி என்று குறிப்பிட்டு இருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது .

பொங்கிய ப்ளூ சட்டை மாறன்

பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'சில தினங்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய் கூத்தாடி என கேவலமாக பேசியிருந்தார் எம் எல் ஏ ஆளூர் ஷானவாஸ். விவாத நிகழ்ச்சியில் நாகரிகமாக அமைதியாக பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர். ஆனால் இந்த முறை பொறுமையை இழந்து இப்படி ஒரு வார்த்தையை பேசியிருக்கின்றார்.

சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது பல நிகழ்ச்சிகளில் அரசியல் மேடைகளில் நடிகர்களைப் போல உள்ளவர்களை ஆட வைப்பது என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள் ?உங்கள் தலைவர் கூட படங்களில் நடித்துள்ளார். விமர்சனம் சொல்கின்றார்.

தனது பிறந்த நாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்துப் பேச சொல்கின்றார். அப்போதெல்லாம் நடிகர் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா? கூத்தாடி என்னும் வார்த்தை எப்படி உங்களுக்கு போன்ற சட்டம் படித்தோர்க்கு கூட இழிவான சொல்லாக மாறியது. இதையே வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தவர்களை பேசியிருந்தால் போராட்டம் வெடித்திருக்கும். நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள்.

ஆனால் சினிமாக்காரர்களிடம் அத்தகைய ஒற்றுமை இல்லை. அதனால் இப்படி பேசுகிறீர்கள். இதனை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சிகள் இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டுமே தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள்.

வரும் தேர்தலில் சினிமா சம்பந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம். எங்களுடன் மேடை ஏற வேண்டாம். இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என்று உறுதியளிக்க இயலுமா? தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா? என்று காட்டமாக பதிவிட்டு இருக்கின்றார்.

Next Story