Ajith: பல வருஷமா அவரும் சொல்றாரு!... யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க... அஜித்தை சீண்டிய ப்ளூ சட்டை..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:22  )

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். என்னதான் ரசிகர் மன்றம் இல்லை என்றாலும் இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். ஆனால் கடந்த 2 வருடங்களாக அஜித் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாதது அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.

கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் 2 வருடங்கள் ஜவ்வு போல் எடுக்கப்பட்டு தற்போது தான் முடிவடைந்துள்ளது. படம் தொடங்கியது முதலிலே ஏகப்பட்ட பிரச்சனைகள், நிதி நெருக்கடி என படத்தை எடுத்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஒரு வழியாகி விட்டார்கள். இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகிவிட்டார். இந்த திரைப்படத்தில் கமிட்டானது முதலே பட குழுவினர் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட், அவ்வபோது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் என்று வெளியிட்டு விடாமுயற்சி படத்தையே அஜித் ரசிகர்கள் மறந்து விட்டார்கள். நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றது. விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கு அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தை மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. நடிகர் அஜித்தை பொருத்தவரையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.

தான் வைத்திருந்த ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். அவரைப் பற்றி செய்திகள் என்பது வெளிவருவது மிகவும் அரிதானது. பப்ளிசிட்டி பிடிக்காத ஒரு எளிய மனிதர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவரைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அவர் பலருக்கு உதவி செய்திருக்கின்றார் ஆனால் அது யாருக்கும் தெரியாது என்றுதான் கூறுவார்கள்.

அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் ஒரு பேட்டியில் அஜித் சார் எனக்கு தெரிந்து இப்போ வரைக்கும் 1000 பேருக்கு மேல உதவி செய்திருப்பார். கையில கொடுக்க மாட்டார் பணத்தைக் கட்டி ஆப்ரேஷன் பண்ணி விட்டு விடுவார். கொடுக்கும்போது அவங்க கிட்டயே வெளியில சொல்லாதீங்கன்னு சொல்லிடுவாரு என்று கூறியிருந்தார்.

இந்த போஸ்டை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரும் பல வருஷமா வெளியே சொல்லாதீங்க சொல்லாதீங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு.. ஆனால் இவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று கிண்டல் அடிக்கும் விதமாக பதிவிட்டு வருகின்றார். இது அஜித் ரசிகர்களை கோவமடைய செய்திருக்கின்றது.

Next Story