Categories: Cinema News

650 கோடி வடை!.. வேட்டையனை விடாமல் துரத்தும் காத்து கருப்பாக மாறிய புளூ சட்டை மாறன்!.. பாவம் தலீவரு!

கூட்டத்தில் ஒருத்தன், ஜெய்பீம் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்றால் என்னவென்றே தெரியாமல் நல்ல படங்களை கொடுத்து வந்த இயக்குனர் ஞானவேல் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்தில் இணைந்துள்ள நிலையில் கடும் விமர்சனங்களையும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த அழுத்தங்களையும் சந்தித்து வருகிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 455 கோடி வசூலை உலக அளவில் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் ஷேர் பெற்ற திரைப்படமாக மாறியுள்ளது.

வேட்டையன் திரைப்படம் வெளியான பின்னர் கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அர்ச்சனா கால் பத்தி அறிவித்திருந்தார். மேலும், கோட் திரைப்படம் 100 கோடி ரூபாய் ஷேரை தமிழ்நாட்டில் பெற்றுள்ளதாக விஜயுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். ஆனால் அதையெல்லாம் ட்ரோல் செய்யாமல் இருந்து வரும் புளூ சட்டை மாறன் தொடர்ந்து ரஜினிகாந்தின் வேட்டையின் படத்தை மட்டும் கடுமையாக கலாய்த்து வருகிறார்.

ஜெயிலர் படத்தை விட வேட்டையன் திரைப்படம் நன்றாக உள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன நிலையில், ஜெயிலர் படத்தை விட வேட்டையன் அதிக வசூலை அள்ளும் என்றும் கூறினார். இதனால் வேட்டையன் திரைப்படம் 650 கோடி ரூபாய் வாடை சுட போவதாக புளூ சட்டை மாறன் ட்ரோல் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வேட்டையன் திரைப்படம் இதுவரை வெறும் 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கடைசி வரை வேட்டையன் திரைப்படம் லாங் ரன் செய்தாலும் 300 முதல் 350 கோடி வருமா? என்பதே சந்தேகம் தான் என்பது தான் கள நிலவரமாக உள்ளது.

pic.twitter.com/ypYSGw8AvS

— Blue Sattai Maran (@tamiltalkies) October 14, 2024

Published by
ராம் சுதன்