Categories: Cinema News latest news

ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு குறுக்க மறுக்க ஓடுறாரு எஸ்.கே!.. பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்..

விஜய் டிவியிலிருந்து சினிமா உலகுக்கு போய் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். மிகவும் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து இவரின் சீனியர் நடிகர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தினார். குறிப்பாக சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சூர்யா, கார்த்தி, விஷால் போன்றவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கி மேலே போனார்.

ஒருகட்டத்தில் அஜித், விஜய்க்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதுவும் அமரன் பட ஹிட்டுக்கு பின் 70 கோடி வரை அவர் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் தாக்கியதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 328 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. அமரன் படத்தின் மெகா வெற்றி சிவகார்த்திகேயனை மொத்தமாக மாற்றிவிட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்திய விழாவில் கலந்துகொள்வது. இளையராஜாவின் சிம்பொனிக்கு வாழ்த்து சொல்வது என கலக்கி வருகிறார்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே போர் துவங்கிய போதும் ‘இதுதான் இந்தியாவின் நிஜ முகம். ஜெய்ஹிந்த்’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், திடீரென கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து உரையாடி அவருடன் புகைப்படமும் எடுத்திருக்கிறார்.

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் சமீபகாலமாகவே சிவகார்த்திகேயனை திடீர் தளபதி என கலாய்த்து வருகிறார். நல்லகண்ணு ஐயாவை சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ள மாறன் ‘ஒரே ஒரு அமரன் ஹிட் கொடுத்துட்டு இப்படி குறுக்க மறுக்க ஓடி போட்டோவா எடுத்து தள்ளுறியேப்பா’ ஐயாவின் மைண்ட் வாய்ஸ் யோசிக்கும் என கலாய்த்திருக்கிறார்.

ஏற்கனவே, டூரிஸ்ட் பேமிலி படக்குழுவை அழைத்து சிவகார்த்திகேயன் பாராட்டியதை ‘தலீவர்(ரஜினி) பாணியில் ஹிட் கொடுக்கும் புது இயக்குனர்களை அழைத்து ஆசி வழங்கி வரும் ஸ்ரீ திடீர் தளபதி ஸ்வாமிகள்’ என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா