உங்க அலப்பறை தாங்க முடியலடா டேய்!. கங்குவா டீமை போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்...
Kanguva: பொதுவாக சினிமாவில் புரமோஷன் என்றாலே வாய்க்கு வந்ததை அடித்துவிடுவார்கள். அது மொக்கை படமாக இருந்தாலும் இது ஒரு சிறப்பான படம்.. தமிழ் சினிமாவையே மாற்றும் படம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், தியேட்டரில் கூட்டமே இருக்காது. அவர்களை குறை சொல்லவு முடியாது.
போட்ட பணத்தை எடுப்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். அதுவும் பெரிய நடிகர்கள், அதிக பட்ஜெட் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. பல லட்சம் செலவு செய்து இசை வெளியீட்டு விழா நடத்துவார்கள். அந்த விழாவில் படத்தில் சம்பந்தப்பட்ட ஹீரோ படத்திற்கே சம்பந்தம் இல்லாத ஒரு சர்ச்சை விஷயத்தை பேசுவார். அதுவே படத்திற்கு பெரிய புரமோஷனாக அமையும்.
ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பேசியதே அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதேபோல்தான், வாரிசு பட விழாவில் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சிலர் பேச ரஜினி ரசிகர்களுக்கு அது கோபத்தை ஏற்படுத்தி இப்போது வரை விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சண்டை போட்டு வருகிறார்கள்.
ஒருபக்கம், அதிக செலவு செய்யப்பட்டு எடுக்கப்படும் படங்களின் புரமோஷன்களில் தயாரிப்பாளர் வாய்க்கு வந்ததை பேசும் நிலையும் இங்கே இருக்கிறது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் கங்குவா. இப்படம் தீபாவளி விருந்தாக நாளை வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஞானவேல் ராஜா கங்குவா படம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும் என சொன்னது ட்ரோலில் சிக்கியது. ஒருபக்கம், சிறுத்தை சிவா இந்த படத்தில் சூர்யா போட்ட உழைப்பை பாராட்டுவதற்காக பல காட்சிகளையும் சொல்லி சூர்யாவின் டெடிகேசனை பாராட்டி வருகிறார். சமீபத்தில் 6மணி நேரம் தண்ணீருக்குள் இருந்து முதலையுடன் சண்டை போடும் காட்சியில் சூர்யா நடித்துக்கொடுத்தார் என அவர் சொல்லியிருந்தார்.
கங்குவா படம் தொடர்பான பில்டப்புகளை பிரபல யுடியூபர் புளூசட்டமாறன் தொடர்ந்து நக்கலடித்து வருகிறார். கங்குவா படத்தில் சூர்யா சாருடன் ஒரு காட்சியில் நடிக்க ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ஆசைப்பட்டார் என நக்கலடித்திருந்தார். இந்நிலையில், புரூஸ்லி போட்டோவை பகிர்ந்து ‘பலவிதமான சண்டைகளை கற்று ரியல் சண்டை சீன்ல நடிச்ச நானும், தம்பி ஜாக்கி சானும் கூட எங்க படங்களை இப்படி பில்ட் அப் பண்ணதில்ல. கிரீன் மேட்ல.. முதலை, சுறா பொம்மைகளோட கட்டி உருண்டுட்டு.. நீங்க தர்ற அலப்பறை இருக்கே.. அநியாயம்டா டேய்’ என புரூஸ்லி செல்வது போல பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.