அமிதாப் வந்தும் வேட்டையன் ஓடல!.. கூலியை அந்த நடிகர் காப்பாற்றுவாரா?!.. மாறனுக்கு நக்கல்தான்!.
Coolie: சிவாஜி படத்தில் ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ என பேசுவது போல முன்பெல்லாம் ரஜினி சிங்கிளாகவே வருவார். அவர் நடிக்கும் படத்தில் அவர்தான் பிரதானம். சரத்பாபு போல சிலர் நடித்தாலும் அதிக முக்கியத்துவம் ரஜினிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். அதைத்தான் ரஜினியும், அவரின் ரசிகர்களும் விரும்புவார்கள்.
ஆனால், காலம் எல்லாவற்றையும் மாற்றும் என சொல்வது ரஜினி விஷயத்திலும் நடந்திருக்கிறது. பேட்ட, தர்பார், அண்ணாத்த என சிங்கிளாக வந்த ரஜினி படங்கள் பாக்ஸ் ஆபிசில் பெரிய வெற்றியை பெறவில்லை. இது ரஜினியிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நெல்சனுடன் கூட்டணி அமைத்து உருவான ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக மோகன்லால், சிவ் ராஜ்குமார், சுனில் என ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொருவரை இறக்கினார்கள். இதை ரஜினியும் அனுமதித்தார். அதனால்தான், அந்த திரைப்படம் எல்லா மாநிலங்களிலும் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை பெற்றது.
அதே ஃபார்முலாவை வேட்டையன் படத்திலும் பின்பற்றி இருக்கிறார்கள். ஹிந்தியிலிருந்து அமிதாப்பச்சன், தெலுங்கிலிருந்து ராணா, மலையாளத்திலிருந்து பஹத் பாசிலை இறக்கினார்கள். ஆனால், இந்த படம் ஜெயிலர் போல வெற்றியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அவ்வளவு ஏன்?. கோட் படத்தின் முதல் நாள் வசூலில் பாதியை கூட வேட்டையன் தொடவில்லை. அமிதப்பாச்சன் இருந்தும் ஹிந்தியில் முதல் நாள் 60 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூல் செய்திருக்கிறது. ஆந்திராவிலும் பெரிய வசூலை பெறவில்லை. இந்நிலையில்தான், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானை களம் இறக்கவிருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரபல யுடியூபர் புளூசட்ட மாறன் டிவிட்டரில் ‘அமிதாப்பச்சனால் வேட்டையனை காப்பாற்ற முடியவில்லை. இப்போது கூலியில் அமீர்கான் வருகிறார். இதுல என்ன தொழில் ரகசியம்னா.. அமீர்கான் கடைசியாக நடித்து வெளியான படங்கள் எல்லாமே ஃபிளாப்.. இவராவது தலைவரை காப்பாற்றுவாரா?’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.