இதுக்கு பயந்தா கங்குவா தள்ளி வச்சீங்க!..எவ்வளவு வடை சுட்டாலும் கஷ்டம்தான்!. கலாய்க்கும் பிரபலம்!..
Vettaiyan: ரஜினி, விஜய், அஜித் போன்ற அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் நாளே 100 கோடி வசூல், இது அந்த படத்தின் வசூலை தாண்டிவிட்டது. இந்த படத்தின் வசூலை தாண்டிவிட்டது என அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அடித்துவிடுவார்கள்.
ரசிகர்கள் மட்டுமல்ல. மூவி டிராக்கர்ஸ் என்கிற பெயரில் பலரும் இது போல பொய்யான வசூலை சொல்லி புள்ளிவிபரம் சொல்வார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இவர்கள் யாரிடமும் நடுநிலை இருக்காது. இந்த நடிகரை பிடிக்கும்... அந்த நடிகரை பிடிக்காது என்பது மட்டுமே அடிப்படையில் காரணமாக இருக்கும். இல்லையெனில், பொய்யான தகவலை உண்மை போல் சொல்லி இருப்பார்கள்.
இதில் சிக்கல் என்னவெனில் சமூகவலைத்தளங்களில் சொல்லப்படும் இப்படி பொய்யான வசூலை பலரும் நம்புவார்கள். ஆனால், உண்மையான வசூல் என்ன என்பது தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தருக்கு மட்டுமே தெரியும். இதுபுரியாமல் பலரும் இதை சமூகவலைத்தளங்களில் பகிர்வார்கள். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.
லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்து நேற்று வெளியான திரைப்படம்தான் வேட்டையன். ஜெயிலருக்கு பின் வெளியாகியிருக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, முன்பதிவில் இப்படம் சாதனை செய்து பல நாட்களுக்கும் டிக்கெட் விற்று தீர்ந்தது.
இந்நிலையில், இப்படம் முதல் நாள் தமிழகத்தில் 30 கோடியை வசூல் செய்துள்ளது என சிலர் சொல்லி வருகிறார்கள். அதோடு, கண்டிப்பாக இப்படம் ஆயிரம் கோடியை வசூல் செய்யும் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ, கோட் படத்தின் முதல் நாள் வசூலை கூட வேட்டையன் தாண்டவில்லை என பதிவிட்டு வருகிறார்கள்.
ஒருபக்கம், வேட்டையன் படம் முதல் நாள் பெரிய வசூலெல்லாம் இல்லை என புளூசட்டமாறன் சொல்லி வருகிறார் மேலும் ‘இந்த தடவை மூணு ஷிப்ட்டு போட்டு வடை சுட்டாலும் கஷ்டம்தான் போல.. இதுக்கு பயந்தா கங்குவாவை தள்ளி வச்சீங்க?’ என பதிவிட்டு நக்கலடித்திருக்கிறார்.